கோவை ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம் முன் 75 – வது சுதந்திர தினவிழாவையொட்டி பாரதிய ஜனதா கட்சி வழக்கறிஞர்கள் பிரிவு சார்பில் பொதுமக்களுக்கு தேசிய கொடி வழங்கும் நிகழ்ச்சி முன்னாள் மாநில வழக்கறிஞர் பிரிவு தலைவர் ஸ்ரீதர் மூர்த்தி தலைமையில் நேற்று நடைபெற்றது.
இதில் மாவட்ட தலைவர் செந்தில் ஆறுமுகம், அகில இந்திய பொதுகுழு உறுப்பினர் செல்வகுமார், வழக்கறிஞர்கள் ரமணி குமார், சார்லி, அனிதா உள்பட 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்துகொண்டனர்.



