லைட் கமர்ஷியல் வெஹிக்கிள் (எல்சிவி)- 2 முதல் 3.5 டன் பிரிவில் முன்னணியில் உள்ள மஹிந்திரா அண்டு மஹிந்திரா லிமிடெட் (எம் அண்டு எம்), பொலெரோ மேக்ஸ் பிக்-அப் என்ற புதிய பிராண்டான எதிர்கால பிக்அப்களை அறிமுகம் செய்துள்ளது.
பொலெரோ மேக்ஸ் பிக்-அப் சிட்டி 3000-ஐ அறிமுக விலையில் ரூ7,68,000 முதல் (எக்ஸ்-ஷோரூம்), ரூ25,000 முன்பணம் செலுத்துதல் மற்றும் கவர்ச்சிகரமான நிதி திட்டங்களுடன் இந்த பிராண்டை வெளி யிட்டது.வளர்ந்து வரும் போக்குவரத்துத் தேவை களுடன், நவீன கால வணிகங்களின் மாறும் தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக மஹிந்திரா பிக்கப் பிரிவில் ஒரு புதிய பிராண்டை அறிமுகப் படுத்துகிறது.
எம் அண்டு எம் லிமிடெட் வாகனப் பிரி வின் தலைவர் வீஜய் நக்ரா கூறுகையில், “ஆல் நியு பொலெரோ மேக்ஸ் பிக்-அப் என்பது, மேம்பட்ட ஐமேக்ஸ் தொழில்நுட்பம், பாதுகாப்பான திருப்ப விளக்குகள், உயரத்தை மாற்றியமைக்கக்கூடிய இருக்கைகள், சக்தி வாய்ந்த மற்றும் திறமையான இன்ஜின் மற்றும் தரத்தில் முன்னணி பேலோட் திறன் போன்ற பல வகை முதல் அம்சங்களைக் கொண்ட ஒரு எதிர்கால பிராண்ட் ஆகும்.
பிக்கப் பிரிவில் இந்த புதிய பெஞ்ச்மார்க் பிராண்டின் மூலம், மஹிந்திரா தனது வாடிக்கையாளர்களுக்கு அபரிமிதமான மதிப்பை வழங்குவதற்கான தனது எண்ணத்தையும் திற¬ னயும் மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்துகிறது” என்றார். எம் அண்டு எம் லிமிடெட், ஆட்டோ மோ ட்டிவ் டெக்னாலஜி மற்றும் தயாரிப்பு மேம்பாடு தலைவர் ஆர்.வேலுசாமி கூறுகையில், “ஆல் நியு பொலெரோ மேக்ஸ் பிக்-அப், சந்தையின் அதிக தேவை, எப்போ தும் உருவாகும் தேவைகளை சமாளிக்க வடிவமைக்கப்பட்டுள்ளது.
அமேசான் வலை சேவை களில் வழங்கப்பட்டுள்ள ஐமெக்ஸ் இணைப்பு வழங்கல்களுடன், வாடிக் கையாளர்கள் தங்கள் சொத்தை சிறப்பாகக் கண்காணிக்கவும் ஆதாயம் பெற செய்ய உதவும் நிகரற்ற தொழில்நுட்ப அம்சங் களைக் கொண்டுள்ளோம். ஆல் நியு பொலெரோ மேக்ஸ் பிக்-அப் சிட்டி 3000 ஆனது, ஒரு டிரைவ் டிரெய்னுடன் பொருத்தப் பட்டுள்ளது. அது சக்தி வாய்ந்தது. 1300 கிலோ அதிக பேலோட் திறனை வழங்குகிறது. இருந்தாலும் 17.2 கிமீ/லி* விதிவிலக்கான எரிபொருள் செயல்திறனை வழங்குகிறது” என்றார்.



