fbpx
Homeபிற செய்திகள்கோவை: குடிநீர் வடிகால் வாரியம் மூலம் மேற்கொள்ளப்பட்டுவரும் குடிநீர் குழாய் பதிப்பு பணிகளை மேயர் ஆய்வு

கோவை: குடிநீர் வடிகால் வாரியம் மூலம் மேற்கொள்ளப்பட்டுவரும் குடிநீர் குழாய் பதிப்பு பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.11க்குட்பட்ட சின்னவேடம்பட்டி, சிவானந்தபுரம் , மணிநகர் ஆகிய பகுதிகளில் குடிநீர் வடிகால் வாரியம் மூலம் மேற்கொள்ளப்பட்டுவரும் குடிநீர் குழாய் பதிப்பு பணிகளை மேயர் கல்பனா ஆனந்தகுமார் , மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, குழாய் பதிப்பு பணிகள் நிறைவடைந்த பின்னர் உடனடியாக சாலைகளை சீரமைத்திட சம்மந்தப்பட்ட பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார்கள்.

உடன் வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல், வடக்கு மண்டல உதவி ஆணையாளர் மோகனசுந்தரி, மாமன்ற உறுப்பினர்கள் பழனிசாமி (எ) சரவை சிவா, பூங்கொடி சோமசுந்தரம், உதவி நகரமைப்பு அலுவலர் விமலா, மண்டல சுகாதார ஆய்வாளர் ராதாகிருஷ்ணன், உதவிப் பொறியாளர்கள் உத்தமன், சக்தி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img