fbpx
Homeபிற செய்திகள்புதிய வணிக உறுதியளிக்கப்பட்ட தொகை 25% வளர்ச்சியில் ஐசிஐசிஐ புரூடென்ஷியல்

புதிய வணிக உறுதியளிக்கப்பட்ட தொகை 25% வளர்ச்சியில் ஐசிஐசிஐ புரூடென்ஷியல்

ஐசிஐசிஐ ப்ரூடென்ஷியல் லைஃப் இன்சூரன்ஸ், 2023-ம் நிதியாண்டின் முதல் காலாண்டில், புதிய வணிகத்தின் மதிப்பில் Value of New Business (VNB) நிறுவனத்தின் லாபத்தின் அளவீடான 31.6% வலுவான நிதிச் செயல்திறனைப் பதிவு செய்துள்ளது. நிறுவனத்தின் (VNB) 31.0% மார்ஜின் உடன் 4.71 பில்லியனாக இருந்தது.

அனுவலைஸ்ட் பிரீமியம் இகுவல்லேன்ட்(APE) ஆண்டுக்கு ஆண்டு 24.7% வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்தது. 2023-ம் நிதியாண்டின் முதல் காலாண்டில், நிறுவனத்தின் புதிய வணிகக் காப்பீட்டுத்தொகை, ஆண்டுக்கு ஆண்டு 24.9% அதிகரித்து 2.21 டிரில்லியனாக உயர்ந்துள்ளது.

குறிப் பிடத்தக்க வகையில், 2022-ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் 14.7% ஆக இருந்த சந்தைப் பங்கு, 2023ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் 15.8% ஆக அதிகரித்து, ஒட்டுமொத்த சந்தைத் தலைமையைப் பெற்றுள்ளது.

அனைத்து அலகுகளிலும் நிலைத்தன்மை விகிதங் கள் மேம்பட்டுள்ளன. வணிகத்தின் தரத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 13-வது மாத விகிதம், 2022 நிதியாண்டின் முதல் காலாண்டுக்கு 85.5% ஆக இருந்தது.

ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லைஃப் இன்சூரன்ஸின் எம்டி மற்றும் சிஇஓ என்.எஸ். கண்ணன் கூறுகையில், “இந்த காலாண்டில் விஎன்பி 31.6% ஆண்டுக்கு ஆண்டு வலுவான வளர்ச்சியாக ரூ 4.71 பில்லியனாக இருந்தது . இதுAPE இல் வலுவான 24.7% வளர்ச்சியால் உந்தப்பட்டது.

பிரீமியம் வளர்ச்சி (பிரீமியம் க்ரோத்), பாதுகாப்பு கவனம் (ப்ரொடெக்ஷன் ஃபோகஸ்), நிலைத்தன்மை மேம்பாடு (பெர்சிஸ்டெண்சி இம்ப் ரூவ்மென்ட்) மற்றும் உற்பத்தித்திறன் மேம்பாடு (ப்ரொடக்டிவிட்டி என்ஹான்ஸ்மென்ட்) ஆகிய எங்களின் 4P மூலோபாயத்தின் கூறுகளால் வழி நடத்தப்பட்டு, இந்த நிதியாண்டில், நிதியாண்டு 2019-ன் VNB ஐ, இரட்டிப்பாக்குவதற்கான எங்கள் லட்சியத்தை அடைவதற்கான பாதையில் இருக்கி றோம் என்று நம்புகிறோம் என்றார்.

படிக்க வேண்டும்

spot_img