fbpx
Homeபிற செய்திகள்கோவை மாவட்ட அங்கன்வாடிகளில் கூடுதலாக 50 ஆயிரம் குழந்தைகளை சேர்க்க வீடுகளில் ஆய்வு

கோவை மாவட்ட அங்கன்வாடிகளில் கூடுதலாக 50 ஆயிரம் குழந்தைகளை சேர்க்க வீடுகளில் ஆய்வு

கோவை மாவட்டத்தில் 1697 அங்கான்வாடி (பால் வாடி) மையங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் மாநகராட்சியில் 615 அங்கன்வாடி மையங்களும், பேரூராட்சிகளில் 325, நகராட்சிகளில் 103, ஊரக பகுதியில் 757 மையங்களும் செயல்பட்டு வருகிறது.

இந்த மையங்களில் 2 முதல் 5 வயது வரையுள்ள 1,79,322 குழந்தைகள் கல்வி கற்கின்றனர். 3 ஆண்டிற்கு கீழ் 91,784 குழந்தைகளும், 3 முதல் 5 வயது வரை 66,639 குழந்தைகளும் கல்வி கற்கின்றனர்.மாநகர், புறநகரில் அங்கன் வாடிகளுக்கு குழந்தைகள் வருகை வெகுவாக குறைந்து வருகிறது.

கடந்த சில ஆண்டிற்கு முன் ஒரு மையத்தில் சரா சரியாக குழந்தைகளின் வருகை 50 ஆக இருந்தது. இப்போது சராசரியாக 20 குழந்தைகள் கூட வருவதில்லை. சில அங்கன்வாடி மையங்களில் ஒரிரு குழந்தைகள் மட்டுமே இருக்கும் நிலையிருக்கிறது.

வேலைக்கு செல்லும் தாய் மார்கள் தங்களது குழந்தை களை விட்டுச்செல்லும் ‘டே கேர் சென்டர்’போல் சில அங்கன்வாடி மையங் களை பயன்படுத்தும் நிலையிரு க்கிறது.

இதே நிலை நீடித்தால் அங்கன்வாடிகள் பெயரள விற்கு கூட செயல்படாமல் போய்விடும். இதை தடுக்க ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தினர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்துள்ளனர்.

குழந்தைகளின் வருகையை அதிகரிக்கும் நோக்கத்தில் வீடு,வீடாக ஆய்வு செய்து பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருக்கும் குழந்தைகளை பெற்றோரிடம் பேசி அழைத்து வந்து அங்கன் வாடிகளில் சேர்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி மாவட்ட அளவில் சுமார் 50 ஆயிரம் குழந்தைகளை கூடுதலாக அங்கன் வாடிகளில் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. காலை 8.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை அங்கன்வாடிகள் செயல்படுகிறது.

இது குறித்து ஒருங்கி¬ ணந்த வளர்ச்சி திட்ட அலுவலர் முருகேஸ்வரி கூறியதாவது:- மாவட்ட அளவில் அங்கன்வாடிகள், நர்சரி பள்ளிகளை விட சிறப்பாக செயல்படுகிறது. நல்ல பாடத்திட்டத்தை மேற் கொண்டு வருகிறோம். பெற்றோர்களின் வாட்ஸ் அப் குழுக்கள் ஏற்படுத்தப் பட்டுள்ளது.

இதில் அங்கன்வாடி களின் தினசரி நடவடிக்கை, பாடம், பயிற்சி, உணவு குறித்த விவரங்கள், குழந்தை களின் செயல்பாடுகள் காண்பிக்கப்படுகிறது. அங்கன்வாடிகளில் குழந்தை நேய கழிவறை, மின் விசிறி வசதிகள் இருக்கிறது. சில இடங்களில் தனியார் நிதியு தவி மூலமாக டி.வி வாங்கி வைக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கு செயல் வழி கற்றல், விளையாட்டு மூலமாக கல்வி கற்பித்து வருகிறோம். இதில் படிக்கும் குழந்தைகள் நல்ல செயல் திறனில் இருக்கி றார்கள். குழந்தைகளி ன்உடல் எடை நல்லமுறை யில் கண்காணிக்கப்படுகிறது.
மாவட்ட அளவில் அங்கன்வாடிகளுக்கு வரும் குழந்தைகளில் 3 வயது வரையுள்ள 89,989 பேர் நல்ல உடல் திறனில் இருக்கிறார்கள்.

3 முதல் 5 வயது வரையில் 65,115 பேர் நல்ல உடல் திறனில் இருக்கிறார்கள். 98 குழந்தைகள் மட்டுமே உடல் எடை குறைவாக இருப்பதும், 95 குழந்தைகள் அதிக உடல் எடையில் இருப்பதும் தெரியவந்திருக்கிறது.அங்கன்வாடியில் சில கட்டிடங்கள் வாடகை யில் இயங்கி வருகின்றன. இதற்கு அரசு கட்டிடங் கள் கிடைக்கும் என எதிர்பார்த்திருக்கிறோம்.

45 அங்கன்வாடிகள் தரம் உயர்த்தப்பட்டது. தினமும் ஒரு வகை உணவு வழங்கப்படுகிறது. செவ்வாய்க்கிழமை சுண்டல் வகைகளும், வெள்ளிக்கிழமை கிழங்கு வகையும் வழங்கப்படுகிறது.

மற்ற நாட்களில் உணவுடன் முட்டை வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img