ஐசிஐசிஐ ப்ரூடென்ஷியல் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் அதிகாரப் பூர்வ மொபைல் ஆப் ஆனது 1 மில்லியன் பதிவிறக்கங்கள் என்ற முக்கியமான மைல்கல்லை கடந்து சாதனைப் படைத்துள்ளது.
இந்த வெற்றியானது வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் பாலிசிகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் வசதியை குறிக்கிறது. அதோடு, அப்ளிகேஷனில் கிடைக்கும் புதுமையான மற்றும் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட அம்சங்களுக்கு இது ஒரு சான்றாகும்.
ஐசிஐசிஐ ப்ரூடென்ஷி யல் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி மணீஷ் துபே கூறும்போது, “கோவிட்-19 தொற்றுநோய் அச்சுறுத்தலானது, டிஜிட் டல் பரிவர்த்தனைக்கு ஊக்கத்தை அளித்துள்ளது.
வாடிக்கையாளரை மையமாகக் கொண்ட அமைப்பாக இயங்க விரும்புகிறோம்.
எங்கள் வாடிக் கையாளர்களுடனான ஈடுபாட்டின் அளவை அதிகரிக்கவும், அவர்களின் உடனடி தேவைகளைப் பூர்த்தி செய்யவும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வருகிறோம்.
எங்களின் புதுமையான மற்றும் மேம்படுத்தப்பட்ட மொபைல் ஆப் ஆனது, வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய எப்போதும் இயங்கும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்” என்றார்.
மில்லினியல் கால டிஜிட்டல் தீர்வுகளைப் பயன்படுத்தி புதுமைகளை உருவாக்கவும் வாடிக் கையாளர்களை மேம்படுத்தவும் எப்போதும் முயற்சி செய்து வருகிறோம்.
புதுமையான மொபைல் செயலியானது வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் பாலிசிகளை கட்டுப்படுத்தும் வகையில் பாதுகாப்பான தகவல்களை அணுகும் முறையை வழங்குகிறது.
அதோடு, மொபைல் ஆப்ஸ் ஒரு மில்லியனுக்கும் அதிகமான முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு 4 சேவை கோரிக்கைகளில் 1-ஐ ஆப்ஸ் மூலம் வாடிக்கையாளர்களால் மேற்கொள்ளமுடியும் என்பது சிறப்பம்சம். இது எந்த நேரத்திலும் எங்கும் சேவை வழங்கும் வசதியைக் கொண்டுள்ளது.
ஆண்ட்ராய்டு ப்ளேஸ் டோர் மற்றும் iOS ஆப் ஸ்டோர் இரண்டிலும் இந்திய ஆயுள் காப்பீட்டுத் துறையில் சிறந்த ரேட்டிங் பெற்றுள்ள அப்ளிகேஷனாக மதிப்பி டப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பு என்றார் அவர்.



