தி சென்னை சில்க்ஸ்-ன் திருமணம் மற்றும் அனைத்து விசேஷங்களுக்கான பிரத்யேக கலெக்ஷன்களின் சிறப்பு கண்காட்சி, விற்பனை உடுமலை தேஜஸ் மஹாலில் துவங்கியது.
வரும் 10-ம் தேதி வரை நடக்கும் இந்த கண்காட்சியை நகராட்சி கமிஷனர் சத்தியநாதன், காவல்துறை அதிகாரி ராஜேஷ் கண்ணன், ஸ்டுடியோ 7 நிர்வாக இயக்குனர் பரிமளா உள்ளிட்டோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர். இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலிருந்தும் வரவழைக்கப்பட்ட கண்கவர் ஆடைகள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளதாக மேலாளர் தெரிவித்தார்.



