fbpx
Homeபிற செய்திகள்உலக பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலில் சவீதா பல் மருத்துவக் கல்லூரிக்கு 18-வது இடம்

உலக பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலில் சவீதா பல் மருத்துவக் கல்லூரிக்கு 18-வது இடம்

சவீதா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் அண்ட் டெக்னிக்கல் சயின்ஸ் பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமான சவீதா பல் மருத்துவக் கல்லூரிக்கு, உயர்கல்விக்கான ஆஸ்கர் விருது எனப் பாராட்டப்படும், க்யூஎஸ் உலகப் பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் 18-வது இடம் கிடைத்துள்ளது.

இது இக்கல் லூரிக்கு கிடைத்த மேலும் ஒரு பெரு மையாகும். இந்தியாவைச் சேர்ந்த ஒரு கல்வி நிறுவனம் இந்தியாவில் முதல் இடத்திலும் (உள்நாட்டு தர வரிசையில்), ஆசியாவில் 3-வது இடத்திலும், சர்வதேச அளவில் 18-வது இடத்திலும் (உலகத் தரவரி சையில்) இடம் பிடித்திருப்பது இதுவே முதல் முறை ஆகும்.

க்யூஎஸ் உலகப் பல்கலைக்கழக தரவரிசை பட்டி யலில் இக்கல்லூரியைத் தவிர முதல் 100 இடங்களில் வேறு எந்த இந்தியக் கல்லூரிகளும் இடம் பெறவில்லை.

இக்கல்லூரியின் விரிவான செயல் திறன் சிறப்பான பாடத்திட்டம் மற்றும் இக்கல்லூரிக்கான நற்பெயர் ஆகியவற்றின் அடிப்படையில் சவீதா பல் மருத்துவக் கல்லூரி தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது. ஒரு கல்லூரி 51 குறுகிய பாடத் திட்டங்கள் மற்றும் 5 விரிவான பாடத் திட்ட பகுதிகளில் சிறந்து விளங்குவது என்பது மிகவும் அசாதாரணமானது ஆகும்.

இதன் புகழ்பெற்ற கல்வி கற்பிக்கும் முறை, சிறப்பான நிர்வாகம், சிறந்த பேராசிரியர்கள் ஆகியவற்றின் காரணாக இக்கல்லூரிக்கு க்யூஎஸ் பல்கலைக்கழகம் 100 மதிப்பெண்களை வழங்கி இருக்கிறது.

இந்த அங்கீகாரம் பல் மருத்துவ கல்வி, ஆராய்ச்சி மற்றும் நோயாளி பராமரிப்பு ஆகியவற்றில் சவீதா பல் மருத்துவக் கல்லூரி தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு கிடைத்த மரியாதையாக பார்க்கப்படுகிறது.

இந்த தரவரிசை குறித்து சவீதா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் அண்ட் டெக்னிக்கல் சயின்ஸ் பல்கலைக்கழக நிறுவனரும் வேந் தருமான டாக்டர் என்.எம். வீரையன் கூறுகையில், உலகளவில் தலைசிறந்த 18 பல் மருத்துவக் கல்லூரிகளில் சவீதா பல் மருத்துவக் கல்லூரி தனக்கென ஓர் இடத்தைப் பிடித்திருக்கிறது.

இந்தியா வில் உள்ள வேறு எந்த கல்லூரிகளுக்கும் இல்லாத வகையில் முதல் முறையாக எங்கள் கல்லூரிக்கு கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இத்தருணத்தில், பல் மருத்துவத் துறையில் சிறந்து விளங்க அயராது உழைத்து வரும் பணியாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித் துக் கொள்கிறேன் என்றார்

படிக்க வேண்டும்

spot_img