கோவிட் தொற்றுநோயால் நாடுமுழுவதும் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள், லாக்டவுன் போ ன்றவற்றால் தொழில்கள், வியாபாரம் என அனைத்து தரப்பினரும் பெரும் பாதி ப்புக்குள்ளாயினர்.
அதில் இருந்து மீள்வதற்காக கடன் வாங்கியவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் நோக்கத்துடன் பாங்க் ஆப் இந்தியா 31.1.2022 முதல் 5.02.2022 வரை கிளை அதாலத் முகாமை நடத்தியது.
குறிப்பாக ரூ.25 இலட்சத்திற்கு கீழ் கடன் நிலுவையில் உள்ள சிறு, குறு தொழில் நாடு தழுவிய துறையினர், விவசாயம், சில்லறை வணிகம் மற்றும் தனிநபர்கள் இதன் மூலம் பயனடைந்தனர்.
இந்த முகாமில் மொத்தம் 6,84,000 வராக்க டன் வாடிக்கையாளர்கள் பங்கேற்று பலன டைந்தனர். அவர்களுக்கு ரூ.407 கோடி வராக்கடன் தீர்வு செய்யப்பட்டது.
கடந்த கிளை அதாலத் பிரச்சாரத்தின் போது முகாமில் பங்கேற்று பலன் பெற முடியாதோர் அல்லது பங்கேற்க முடியாதோர், கடன் பெற்றவர்களுக்கு கூடுதல் வாய்ப்பை வழங்குவதற்காக, 28.02.2022 முதல் 05.03.2022 வரை மீண்டும் முகாம்களை நடத்த பேங்க் ஆஃப் இந்தியா முடிவு செய்துள்ளது.



