fbpx
Homeபிற செய்திகள்ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனை செவிலியர் துறைக்கு அங்கீகாரம்

ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனை செவிலியர் துறைக்கு அங்கீகாரம்

ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனை செவிலியர் துறைக்கு, இந்திய தர நிறுவனம் சிறப்பு அங்கீகாரம் வழங்கி உள்ளது.

இது குறித்து ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கோவை ஆவாரம்பாளையத்தில் ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.

இந்திய தர நிறுவனம் (குவாலிட்டி கவுன்சில் ஆஃப் இந்தியா) இம்மருத்துவமனையில் செயல்பட்டுவரும் செவிலியர் துறையின் தரம், தகுதி ஆய்வு மேற்கொண்டது.

இதன் தொடர்ச்சியாக ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனையின் செவிலியர் துறைக்கு சிறப்பு அங்கீகாரம் அளித்து தேசிய மருத்துவ மற்றும் சுகாதார அங்கீகாரச் சான்றிதழ் (என்ஏபிஎச் – நேஷனல் அக்கரடிசன் ஃபார் ஹாஸ்பிட்டல் அண்டு ஹெல்த்கேர்) வழங்கியுள்ளது.

இதன் மூலம் ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனை, கோவை மாவட்ட அளவில் இந்த சிறப்பு அங்கீகாரம் பெற்ற முதல் மருத்துவமனை என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

படிக்க வேண்டும்

spot_img