fbpx
Homeபிற செய்திகள்கிருஷ்ணகிரியில் நாராயணசாமி நாயுடு 97வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

கிருஷ்ணகிரியில் நாராயணசாமி நாயுடு 97வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

கிருஷ்ணகிரியில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் நிறுவனர் நாரா யணசாமி நாயுடுவின் 97வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு தமிழக விவசாயிகள் சங்க மாநி லத் தலைவர் ராமகவுண்டர் தலைமை வகித்தார்.

இதில் மூத்த நிர்வாகிகள் வண்ணப்பா, சுப்பிரமணிரெட்டி, கண்ணையா, நசீர்அகமது, அசோக்குமார், வேலு, மணிமேகலை, ஜோதிகண்ணன், ஜெய்பால், வரதராஜ், முனிரத்னம், கண்ணப்பன், வெங்கடேசன், சத்திய மூர்த்தி, கோவிந்தராஜ், ரவி,பசுவன், அஸ்வத்நா ராயணன், அனுமந்தராசு, பழனி, கணேசன், ரஞ்சித், ருத்ரமூர்த்தி, சரவணகுமார், சின்னசாமி, முனுசாமி, ராஜ்குமார், கோவிந்தராஜ் நாகராஜரெட்டி மற்றும் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், விவசாயி கள் சங்க பிரதிநிதிகள் குப்பையன், சீனிவாசன், சக்திசங்கர், அனுமந்தன், ராஜா, கோவிந்தசாமி, செந்தில், பைரேசன், குமார், வேலு, கதிர்வேல், ராமூர்த்தி, நடராஜ், முரு கேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில், தமிழக முதல்வர், அனைத்து விவசாயிகளுக்கும் நகைக் கடன் கிடைக்கும் வகையில் வழிமுறைகளை மாற்றி அமைத்து அனைவருக்கும் கடன் தள்ளுபடி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.

கிருஷ்ணகிரி மாவட்டம் மூன்றில் ஒரு பங்கு வனப்பகுதிகளால் சூழப்பட்டுள்ளது. இதனால் காட்டுப் பன்றி மற்றும் வன விலங்குகள் பயிர்களை சேதமாக்கி வருகின்றன.

காட்டுப்பன்றிகளை சுடுவதற்கும், சாப்பிடுவதற்கும் அனுமதிக்க வேண் டும். கடந்த சட்டமன்ற தேர்தலின் போது, தமிழக முதல்வர் வாணி ஒட்டு திட்டத்தை நடை முறைப்படுத்துவதாக வாக்குறுதி அளித்திருந்தார்.

ஒரு குழு அமைத்து வாணிஒட்டு மற்றும் அழியாளம் திட்டங்களை ஆய்வு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல் வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.

படிக்க வேண்டும்

spot_img