முன்னணி பல்துறை மருத்துவமனையாக செயல்பட்டு வரும் கேஎம்சி ஹெச் மருத்துவமனை நிர்வாகத்தின் கீழ் புதிய 750 படுக்கை வசதியுடன் கேஎம்சிஹெச் மருத்துவக்கல்லூரி பொதுமருத்துவமனை செயல்பட்டு வருகிறது.
இதில் அதிநவீன கேத் லேப், எம்ஆர்ஐ ஸ்கேன் மற்றும் சிடிஸ்கேன் ஆகி யவற்றின் துவக்கவிழா நடைபெற்றது. மின்சாரம், கலால் மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி புதிய மருத்துவக் கருவிகளைத் துவக்கி வைத்தார்.
விழாவில், கேஎம்சி ஹெச் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் நல்லாஜி. பழ னிசாமி பேசுகையில், அனைத்து வகையான உயர்தரமான மருத்துவ சேவைகளும் சாதாரண மக்களுக்கும் குறைந்த கட்டணத்தில் எளிதில் கிடைக்க வேண்டும் என்ற உயர்ந்த இலட்சியத்துடன், கேஎம்சிஹெச் மருத்துவகல்லூரி பொதுமருத்துவமனை செயல்பட்டு வருகிறது.
இந்த நோக்கத்திற்கு மேலும் உத்வேகம் அளிக்கும் வகையில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தொடங்கிய மூன்றே ஆண்டுகளில் கேத்லேப், எம்ஆர்ஐ ஸ் கேன், சிடிஸ்கேன் ஆகியன பொதுமக்களின் மருத்துவ சேவைக்கு அர்ப் பணிக்கப்பட்டுள்ளன என்றார்.
கேஎம்சிஹெச் துணைத் தலைவர் டாக்டர் தவமணி பழனிசாமி, செயல்இயக்குனர் டாக்டர் அருண் என்.பழனிசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கேஎம்சிஹெச் மருத்துவக்கல்லூரி பொது மருத்துவமனையில் 50 படுக்கைகளுடன் தீவிர சிகிச்சைப்பிரிவு 30 படுக்கைகளுடன் அவசர கால சிகிச்சைப்பிரிவு, 11 ஆபரேஷன் தியேட்டர்கள், கேத்லேப், எம்ஆர்ஐ ஸ்கேனர், 16 ஸ்லைஸ் சிடி ஸ்கேனர், அல்ட்ராசவுண்டு டிஜிட்டல் எக்ஸ்ரே உள்ளிட்ட முழுமையான மருத் துவ வசதிகள் உள்ளன.



