தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணையின்படி, காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை நேரில் வழங்கினார்.
அருகில் மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி, தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, தருமபுரி சார் ஆட்சியர் சித்ரா விஜயன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ஜெயக்குமார், மாவட்ட சமூக நல அலுவலர் பவித்ரா உட்பட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.



