fbpx
Homeபிற செய்திகள்‘மெடால்’ 400 மையங்கள் வரை திறக்க திட்டம்

‘மெடால்’ 400 மையங்கள் வரை திறக்க திட்டம்

தென்னிந்தியாவின் மிகப்பெரிய ஒருங் கிணைந்த நோய் கண்டறியும் சேவை வழங்கும் நிறுவனங்களில் ஒன்றான ‘மெடால்’ (MEDALL), இந்த ஆண்டில் சுமார் 300 முதல் 400 மையங்கள் வரை திறக்க திட்டமிட்டுள்ளது.

தமிழ்நாட்டின் 2 மற்றும் 3 அடுக்கு நகரங்களுக்குள் ஆழமாக ஊடு ருவியுள்ள மெடால், தற்போது மற்ற தென்னிந்திய மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா மற்றும் கேரளாவிற்கும் விரிவடையவுள்ளது.

உரிமைக் கிளை மாதிரியாக அமைக்கப்படவுள்ள இந்த மையங்கள், மினி சுகாதார மையங்கள், முழுசேவை மையங் கள், ஆய்வக மாதிரி சேகரிப்பு மையங்கள் மற்றும் ‘மெடால் கேர் சென்டர்கள்’ என பல வடிவங்களில் இருக்கும். இந்த ஆண்டில் தென்னிந்தியா முழுவதும் சுமார் 300 முதல் 400 மையங்கள் வரை திறக்க ‘மெடால்’ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

மெடாலின் தலைமை நிர்வாக அதிகாரி அர்ஜுன் அனந்த் கூறியதாவது: கோவிட்-19 பாதிப்புகள் அதிகரித்து வருவதால் முன்னெப்போதையும் விட தடுப்பு சுகாதாரத்தின் தேவை, இப்போது அதிகமாக உணரப்படுகிறது.

தென்னிந்தியா முழுவதும் விரிவடைவதன் மூலம், வைரஸ் மற்றும் பிற நோய்களின் தாக்கத்தை ஆரம்ப நிலையிலேயே தடுக்கவும், சிறந்த ஆரோக்கியத்துடன் இருக்கவும் உதவும் நோக்கில், நோயறிதல் மற்றும் தடுப்பு சுகாதார சேவைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண் டுள்ளோம்.

உரிமைக் கிளை மாதிரியை தேர்ந்தெடுப்பதின் மூலம், தொழில் முனைவோர்களுக்கு (குறிப்பாக பெண்களுக்கு), சொந்தமாக தொழில் தொடங்கி, உலகத்தரம் வாய்ந்த நோயறிதல் சேவைகளை கவனிப்பு மற்றும் அக் கறையுடன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் வாய்ப்பை அளிக்கிறோம்.

நோய் கண்டறியும் சேவைகளின் தேவை அதிகமாக உணரப்படும் 2 மற்றும் 3 அடுக்கு நகரங்களை இலக்காகக் கொண்டு ‘மெடால்’ செயல்படுகிறது. ‘மெடால்’ சிறந்த நோய் கண்டறியும் சேவைகள் சாமானியர்களுக்குச் சென்றடைவதையும், பெரும்பாலான மக்களுக்கு குறைந்த செலவில் நல்ல தரமான சேவைகள் கிடைப்பதை உறுதிபடுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்றார்.
மேலும் அறிய: http :// www.medall.in

படிக்க வேண்டும்

spot_img