fbpx
Homeபிற செய்திகள்மாணவர்களுக்கு அறிவுத்திறன் போட்டி: ரூ.20 லட்சம் வரை மானியம் தருகிறது அன்அகாடெமி

மாணவர்களுக்கு அறிவுத்திறன் போட்டி: ரூ.20 லட்சம் வரை மானியம் தருகிறது அன்அகாடெமி

தேசிய அளவிலான கல்வி உதவித் தொகைக்கு தேர்வான அன்அகாடெமி அறிவுத்திறன் தேர்வை அறிவித்துள்ளது. ஜெஇஇ, நீட், யுஜி மற்றும் 7ம்- வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் இதில் பங்கேற்கலாம்.

இப்போட்டியில் வெற்றி பெறுவோர் கல்லூரி கல்வி உதவியாக ரூ.20 லட்சம் வரை அவர்களது பட்டப் படிப்பு, பட்டமேற்படிப்புக்கு பெறுவர். அன்அகாடெமி அறிவுத் திறன் தேர்வானது, திறமையான இளம் வயதினரை கண்டுபிடித்து அவர்களது கனவை நனவாக்க ஏற்படுத்தப்பட்டது.

இந்த திட்டத்தின்படி, நான்கு கல்வி உதவி தொகை தேர்வுகள் ஜனவரி 23, 29, பிப்ரவரி 6, 13 ஆகிய தேதிகளில் நடக்கின்றன. இறுதி தேர்வுக்கு பொருந்தும் வகையில் இந்த தேர்வுகள் நடக்கின்றன.

ஒவ்வொரு தேர்விலும் செயல்திறன், வார்த்தை திறன், தர்க்க ரீதியான காரணிகள் மற்றும் பொது அறிவியல் தேர்வுகள் இடம் பெறும். உயர்ந்த மதிப்பெண் பெறுவோர், அவர்களது மேற்படிப்பிற்கான உதவியையும், 100 சதவீத அன்அகாடெமி சந்தாவில் கல்வி உதவியையும் பெறுவர்.

ஜனவரி 29, பிப்ரவரி 13 ஆகிய நாட்களில் நடக்கும் தேர்வில் பங்கேற்கும் மாணவர்கள், கல்லூரி கல்வி உதவி தொகையாக, கல்லூரி பட்டப்படிப்பிற்கு, பட்ட மேற்படிப்பிற்கு 20 லட்சம் ரூபாய் வரை பெறுவர்.

இந்த உதவித் தொகை பிப்ரவரி 13-ல் வழங்கப்படும். இந்த தேர்வு எழுதுவோர் கற்பதில் தங்களுக்கு உள்ள பலவீனத்தை அறிய முடியும். விரிவான மதிப்பெண் அறிக்கை பெறவும் இயலும்.

தங்களது சந்தேகங்களை வீடியோ பதிவு விடைகளை கண்டு தெளிய முடியும். போட்டி பற்றிய விதிமுறைகளை அறியவும், சேரவும் விண்ணப்பிக்கலாம். https://unacademy.com/scholarship/prodigy2022
என்ற இணையதளத்தை பார்வையிடலாம்.

படிக்க வேண்டும்

spot_img