fbpx
Homeபிற செய்திகள்ரூ.23 லட்சம் மதிப்பில் கோவில் பணியாளர்களுக்கு புத்தாடைகள் கோவை ஆட்சியர் சமீரன் வழங்கினார்

ரூ.23 லட்சம் மதிப்பில் கோவில் பணியாளர்களுக்கு புத்தாடைகள் கோவை ஆட்சியர் சமீரன் வழங்கினார்

கோவையில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்க ளில் பணிபுரியும் அர்ச்சகர்கள் உள்ளிட்ட பணியாளர்களுக்கு ரூ.23 லட்சம் மதிப்பிலான புத்தாடைகள் மற்றும் சீருடைகளை மாவட்ட ஆட்சியர் சமீரன் வழங்கினார்

தமிழக அரசு சட்டமன்ற கூட்டத்தொடரில் இந்து சமய அறநிலையத்துறை உள்ள அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகளுக்கு புத்தாடைகள் மற்றும் கோவில் பணியாளர்களுக்கு சீருடைகள் வழங்கப்படும் என்று அறிவித்து இருந்தது.

அதன்படி கோவை மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் ஆட்சியர் சமீரன் முன்னிலையில் இன்று அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள் பூசாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு புத்தாடைகள் மற்றும் சீருடைகள் வழங்கப்பட்டன

கோவை மாவட்டத்தில் அர்ச்சகர்கள் பட்டாச் சாரியார்கள் மற்றும் பூசாரிகள் என மொத்தம் 429 நபர்களுக்கு புத்தாடைகளும், கோவில்களில் பணிபுரியும் பணியாளர்களில் 352 ஆண்களுக்கும், 110 பெண்களுக்கும் சீருடைகளும் வழங்கப்பட்டன.

கோவை மாவட்டத்தில் மொத்தமாக 1091 பேருக்கு ரூ.23 லட்சத்து 2 ஆயி ரத்து 450 மதிப்பில் வழங் கப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சியில் மருதமலை பேரூர் கோவில்களின் துணை ஆணையர் விமலா, ஈச்ச னாரி கோவில் உதவி ஆணையர் ஆனந்தன், இந்து சமய அறநிலையத் துறை (கோவை) உதவி ஆணையர் விஜயலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img