fbpx
Homeபிற செய்திகள்விவோவின் ஒய்33டி ஸ்மார்ட்போன் அறிமுகம்

விவோவின் ஒய்33டி ஸ்மார்ட்போன் அறிமுகம்

உலக அளவில் புதுமைமிக்க ஸ்மார்ட் போன் பிராண்டாக திகழும் விவோ தனது புதிய ஒய்33டி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
இதில் பொருத்தப்பட்டுள்ள குவால் காம் ஸ்நாப்டிராகன் 680 புராசசர் பயனாளர்களுக்கு சிறந்த கேமிங் அனு பவத்தை வழங்கும்.

இதில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இது 8 மி.மீ. தடிமன் கொண்ட புற வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மிகவும் எடை குறைந்த பிரீமியம் டிசைனில் வடிவமைக்கப்பட்ட சக்திவாய்ந்த தொழில்நுட்பத்துடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்திருக்கிறது.

8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கார்டுடன் வெளிவந்திருக்கும் இதன் விலை 18,990 ரூபாய். இது மிரர் பிளாக் மற்றும் மிட்டே ட்ரீம் ஆகிய 2 வண்ணங்களில் வெளிவந்திருக்கிறது.

கடந்த 10-ம் தேதி முதல் அமேசான், பிளிப்கார்ட், விவோ இந்தியா இ-ஸ்டோர், பேடிஎம், டாடா, பஜாஜ் பின்சர்வ் இஎம்ஐ ஸ்டோர் உள்ளிட்ட ஆன்லைன் மற்றும் பல்வேறு ஆப்லைன் சில்லறை ஸ்டோர்களிலும் கிடைக்கிறது.

புதிய அறிமுகம் குறித்து விவோ இந்தியாவின் பிராண்ட் ஆலோசனை இயக்குனர் யோகேந்திர ஸ்ரீராமுலா கூறுகையில், ‘கடந்த ஆண்டு வெளி வந்த ஒய்33எஸ் ஸ்மார்ட்போன் வெற்றியை தொடர்ந்து, தற்போது ஒய் தொடரில் சில மேம்பாட்டுடன் இந்த ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளோம்.

நாடு முழுவதும் உள்ள அனைத்து நுகர்வோருக்கும் புதுமையான தொழில் நுட்பத்தை வழங்குவதில் என்றும் உறுதியாக இருக்கிறோம்.

வாடிக்கையாளர்களுக்கு பிரீமியம் ரகத்தில் ஈடில்லாத சிறந்த அனுபவத்தை வழங்கும் விதமாக 50 எம்பி பின்புற கேமரா மற்றும் இரவு நேரத்தில் துல்லியமாக செல்பி எடுக்கும் விதமாக முன்புற செல்பி கேமரா மற்றும் குவால்காம் ஸ்நாப்டிராகன் 680 புராசசர் உடன் ஈடில்லாத சிறந்த கேமிங் அனுபவத்தை வழங்குவதற்காக தற்போது ஒய்33டி ஸ்மார்ட்போனை அறி முகம் செய்திருக்கிறோம்.

சக்திவாய்ந்த செயல்திறன்மிக்க அழகான மற்றும் நேர்த்தியான வடிவமைப்பைக் கொண்ட ஸ்மார்ட்போனை விரும்பும் நுகர்வோருக்கு இது சரியான தேர்வாக இருக்கும் என்று நம்புகிறோம் என்றார்.

படிக்க வேண்டும்

spot_img