தொற்றுநோய் மற் றும் பொதுமுடக்கம் காரணமாக முடங்கிய ஒரு வருடத்தில், சென்னை 2021-ம் ஆண்டில் அலுவ லகம், குடியிருப்பு ஆகிய இரண்டு சொத்துப் பிரிவுகளின் செயல்திறனில் பின்னடைவைக் கண்டது.
நைட் ஃபிராங்க் இந்தியாவின் சமீபத்திய அறிக்கையில், சென்னையின் குடியிருப்பு சந்தையானது, ஒரு நிலையான மீட்சியுடன் 38% (YoY) விற்பனை அதிகரித்து, 11,958 குடி யிருப்பு அலகுகளைப் பதிவு செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
நைட் ஃபிராங்க் இந்தியா, “இந்தியா ரியல் எஸ்டேட்: பி2 2021” எனும் தனது முதன்மையான அரையாண்டு அறிக்கையின் 16-வது பதிப்பை வெளியிட்டது.
இது ஜூலை- டிசம்பர் 2021 காலகட்டத்திற்கான எட்டு முக்கிய நகரங்களில் உள்ள குடியிருப்பு மற்றும் அலுவலக இடத்திற்கான சந்தை செயல்திறன் பற்றிய விரிவான பகுப்பாய்வை வழங்குகிறது.
பி2 2021-ல், சென்னையில் 6,206 வீடுகள் விற்பனையுடன், YoY அடிப்படையில் 9% வளர்ச்சியைக் கண்டுள்ள தென அறிக்கை எடுத்துக் காட்டுகிறது.
நைட் ஃபிராங்க் இந் தியா-வின் தமிழ்நாடு மற்றும் கேரளாவின் மூத்த இயக்குனர் ஸ்ரீனிவாஸ் அனிகிபட்டி கூறுகையில், ‘பெருந்தொற்றானது, குடும்பத்தின் முதன்மை குடியிருப்பை மேம்ப டுத்துவதற்கும், வீட்டி லிருந்தே வேலை, படிப்பு ஆகியவற்றை மேற்கொள்வதற்கான இடவசதியின் அவசியத்தையும் ஏற்படுத் தியுள்ளது.
இது வீட்டு விற்பனையில் நடுத்தர மற்றும் அதிக விலையிலான பிரிவுகளின் விற்பனையை ஊக்குவிக்கிறது.
இந்த உத்வேகமான உணர்வுகள், சமீபத்திய விலை மீட்சி ஆகியவை ஊக்கமளிக்கும் அறி குறிகளாகவும், சந்தையின் தேவைகள் நடுத்தர காலத்திற்குள் அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கிறோம்.
இவ்வாண்டில் பரிவர்த்தனைகளின் அளவு குறைவாக இருந்தாலும், ஆண்டின் இரண்டாம் பாதியில் குத்தகை நட வடிக்கையில் சந்தை ஏற்றம் கண்டுள்ளது.
6 மாத காலப்பகுதியில் விலை மதிப்பும் நிலையானதாக உள்ளது.
மீட்சிக்கான ஆரம்ப அறிகுறிகள் உள்ளதுடன் சந்தையானது நடுத்தர மற்றும் நீண்ட காலத்திற்கு அலுவலக இடத்திற்கான பரிவர்த்தனை அளவுகளில் ஏற்றத்தைக் காணும் என்று எதிர் பார்க்கப்படுகிறது’ என்றார்.



