முதன்மையான வணிக வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களுக்கு கடன் வழங்குவதில் தீவிர கவனம் செலுத்திவரும், சென்னையை தலைமையிடமாகக் கொண்டு வளர்ந்து வரும், வங்கி அல்லாத நிதி நிறுவனங்களில் ஒன்றான ஸ்ரீநிதி கேபிட்டல் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், இந்தோஸ்டார் கேபிட்டல் பைனான்ஸ் நிறுவனத்திடமிருந்து, இணை கடன் வழங்கும் வசதியாக ரூ.300 கோடியை திரட்டியுள்ளது.
இந்தோஸ்டார் கேபிட்டல் பைனான்ஸ் நிறுவனம் என்பது அமெரிக்காவின் எவர்ஸ்டோன் கேபிட்டல் மற்றும் கனடாவின் புரூக்ஃ பீல்ட் முதலீட்டிற்குச் சொந் தமான 10,000 கோடி நிகர மதிப்புள்ள நிறுவனமாகும்.
சென்னையில் செய்தி யாளர்கள் சந்திப்பின் போது, ஸ்ரீநிதி கேபிட் டல் பிரைவேட்- மற்றும் இந்தோஸ்டார் இடை யேயான கூட்டணி அறிவிக்கப்பட்டது.
இதற்கான ஒப்பந்தத்தில் இந் தோஸ்டார் கேபிட்டல் லிமிடெட் தலைமை செயல் அதிகாரி தீப் ஜக்கி, ஸ்ரீநிதி கேபிட்டல் பிரைவேட் லிமிடெட் தலைமை செயல் அதிகாரி சி.செல்லமணி ஆகியோர் கையெழுத்திட்டனர்.
ஸ்ரீநிதி கேபிட்டல் பிரைவேட் லிமிடெட்டின் தலைமை நிர்வாக அதி காரி எஸ். செல்லமணி நிதி திரட்டல் குறித்து பேசுகையில், ‘ஒரு பெருந்தொற்றுக்கு மத்தியில் இந்த துறையில் நீண்ட அனுபவம் வாய்ந்த நிறுவனங்கள் கடுமையாக போராடிக் கொண்டிக்கும்போது, விரைவான வளர்ச்சி, தொழில்துறை வசூல் தொகை ஆகியவை அந்த பெரிய நிறுவனங்களுக்கு இணையாக உள்ளதால் ஒட்டுமொத்த தொழில் துறையினரின் கவனத்தை யும் ஸ்ரீநிதி கேபிட்டல் ஈர்த் துள்ளது’ என்றார்.
இந்தோஸ்டார் கேபிட்டல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தீப் ஜக்கி கூறுகையில், ஸ்ரீநிதி கேபிட்டல் பிரை வேட் லிமிடெட்டின் மிகப் பெரிய வளர்ச்சியை கண்டுள்ளோம்.
இந்நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக தொழில்துறையில் வலு வான நிறுவனமாக மாறுவதற்கான அடிப்படை கட்டமைப்பு உள்ளது என்று உறுதியாக நம்புகிறோம்.
எங்களது இருப்பை மேலும் விரிவுபடுத்தும் முயற்சியில், தற்போது ஸ்ரீநிதியுடன் இணைந்துள்ளோம். இணைப்பின் முதல் கட் டமாக, தற்போது ரூ.300 கோடி மதிப்புள்ள இணை கடன் வழங்கும் வசதியை முடிக்க உள்ளோம்.
வரும் ஆண்டுகளில் இந்தத் துறையில் அதிக முதலீடு செய்ய திட்டமிட்டுளோம் என்றார்.



