தமிழ்நாடு மாநில உணவு பாதுகாப்பு துறை மாநில ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் தருமபுரி மாவட்டம் முழுதும் உள்ள உணவகங்கள், தாபாக்கள், பாஸ்ட் புட் துரித உணவகங்களில் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ஏ.பானுசுஜாதா தலைமையில் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு செய்தனர்.
கடத்தூரில் தருமபுரி ரோடு அரூர் ரோடு கடைவீதி பேருந்து நிலையம் பகுதிகளில்உள்ள தாபா , உணவகங்கள் மற்றும் சாலை ஒர துரித உணவு, சில்லி சிக்கன்கடைகள், மளிகை ,பேக்கரிகள், தேநீர்கடைகள் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் பானுசுஜாதா மற்றும் மொரப்பூர் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் உள்ளிட்ட குழுவினர் ஆய்வு செய்தனர்.
உணவுபாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றாத இரண்டு உணவகங்க ளுக்கு உடனடி அபராதம் முறையே 2000 மற்றும் 3000 விதித்து மேம்பாட்டு நோட்டீஸ் அளிக்கப்பட்டது.
மேலும் உரிமம் இல்லாத உணவ கங்களுக்கும் உடனடியாக நடவடிக்கை எடுக்க நோட்டீஸ் அளிக்கப்பட்டது. சுகாதாரம் குறைவாக காணப்பட்ட உணவகங்களுக்கு மேம்பாட்டு நோட் டீஸ் அளித்து உடனே நிவர்த்தி செய்ய அறிவுறுத்தப்பபட்டது.
செயற்கை நிறமேற்றி கன்டெய்னர், பவுடர் பாக்கெட்களையும் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது . இறைச்சி சில்லி சிக்கன் மற்றும் துரித உணவுகளில் அறவே செயற்கை நிறமி சேர்க்கக் கூடாது என எச்சரிக்கப்பட்டது. மளிகை பொருட்கள், குடிநீர் கேன்கள், குடிநீர் பாட்டில்கள் மற்றும் குளிர் பானங்களில் கண்டிப்பாக லேபிள் நடைமுறை பின்பற்ற வேண்டும் என எச்சரித்தார்.
அச்சிட்ட செய்தி தாள்களில் எண்ணெய் பலகாரங்கள் விநியோகிப் பதோ பொட்டலமிடுதலோ கூடாது என விழிப்புணர்வு செய்யப்பட்டது.
முகக்கவசம் அணியாத நபர்க ளிடம் அபராதம் வசூலித்து ரசீது வழங்கினார். உரிய லேபிள் மற் றும் தயாரிப்பு தேதி இல்லாத திண்படங்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.
வணிகர்கள் அனை வரும் கொரோனா, ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கைகளான வழிமுறைகள் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி, சானிடைசர் மற்றும் கை கழுவ வசதி எற்படுத்துதல், உரிமையாளர், பணியாளர்கள் இரு தவணை தடுப்பூசி போட்டிருத்தல் உறுதி படுத்துதல் போன்றவைகளை கண்டிப்பாக நடைமுறைப் படுத்த வலியுறுத்தப்பட்டது. இது போன்ற ஆய் வுகள் தொடர்ச்சியாக நடைபெறும் எனவும் , உணவு மற்றும் உணவு பொருள் பற்றிய புகார்களுக்கு மாநில வாட்ஸ் அப் புகார் எண் 9444042322 என்ற எண்ணிற்கு sனீs,ஷ்லீணீt’s ணீஜீஜீ அனுப்பலாம் என நியமன அலுவலர் தெரிவித்தார். உணவகங்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டினர்.



