ஐசிஐசிஐ புரூடென் சியல் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனம் அதன் புதுமையான ஒரு நீண்ட கால காப்பீட்டு திட்ட மான, ஐசிஐசிஐ புரு ஐபுரடெக்ட் ரிடர்ன் ஆப் பிரிமீயம் (‘ICICI Pru iProtect Return of Premium’) என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
வாடிக்கையாளரை மையமாக கொண்ட, அவர்களின் வாழ்க்கை நிலைமைகளின் அடிப் படையிலான உறுதியான பாதுகாப்பை வழங்குகிறது.
இதில் வாடிக்கையாளர்களின் வாழ்க்கை நிலைகளின் அடிப்படையில் வாழ்நாள் முழுவதை யும் உள்ளடக்கிய காப் பீட்டின் தேவையை தானாகவே சரி செய்யக் கூடியதாக இந்த பாலிசி உருவாக்கப்பட்டுள்ளது.
உயிர் வாழ்வதற்காக வாடிக்கையாளர் செலுத்தும் அனைத்து பிரிமீயங்களிலும் 105% வருவாயை ‘ஐசிஐசிஐ புரு ஐபுரடெக்ட் ரிடர்ன் ஆப் பிரிமீயம்’ வழங்குகிறது.
இது தவிர, காப்பீட்டுத் துறையிலேயே மிகவும் உச்சபட்ச அளவுகளில் ஒன்றாக, 64 சிக்கலான நோய்களுக்கு எதிரான பாதுகாப்பையும் வழங்குகிறது.
இது இரண்டு விதமான வகைகளில் வழங்கப்படுகிறது- வாழ்க்கை நிலைமைகளை உள்ளடக்கியது (Life-stage Cover) மற்றும் லெவல் கவர் அம்சங்களை (Level Cover) உள்ளடக்கியது.
ஐசிஐசிஐ புரூடென்சியல் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் தலைமை விநியோக அதிகாரி, அமித் பட்லா கூறுகையில், “எங்களது புதுமையான பாதுகாப்பு பாலிசியாக, ஐசிஐசிஐ புரு ஐபுரடெக்ட் ரிடர்ன் ஆப் பிரிமீயம் உள்ளது.
நிலையான பிரிமீயம் மற்றும் அனைத்து பிரிமீயங்களிலும் 105% வருமானத்துடன் கூடிய, அது வாழ்க்கை யின் அனைத்து நிலைமை களுக்கும் ஏற்ற பாதுகாப்பை வழங்குகிறது.
உயிர் வாழும் போதே கிடைக்கக்கூடிய பலன் தொடர்பான வாடிக்கையாளர் மனதில் எழும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் இந்த பாலிசி பதிலளிக்கும் என நாங்கள் நம்புகிறோம். வாடிக்கையாளர்களின் தேவைகளை உள்ளடக் கியதாகவே எங்களது தயாரிப்புகளை வடிவமை க்கும் முறைகளை நாங்கள் மேற்கொண்டுள்ளோம்.
இந்தியாவில் உள்ள மக்கள் தொகையில் பெரும் பகுதியினர் நிதி பாதுகாப்பை பெறும் வகையில் நவீன தொழில்நுட்ப தீர்வுகளை தொடர்ந்து பயன்படுத்தி வருகிறோம்” என்றார்.



