இந்தியாவின் முன்னணி சொத்து மேலாண்மை நிறுவனங்களில் ஒன்றான ஆக்ஸிஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனமானது, ஆக்சிஸ் நிஃப்டி நெக் ஸ்ட் 50 இன்டெக்ஸ் ஃபண்ட் துவங்குவதாக அறிவித்துள்ளது.
என்எப்ஓ, ஜன.7 அன்று சந்தாவிற்காகத் திறக்கப்பட்டு, வரும் 21 அன்று முடிவடையும் என்று அறிவித்துள்ளது. அதோடு குறைந்தபட்ச விண்ணப்பத் தொகை 5000 மற்றும் முதலீட்டாளர்கள் 1-ன் மடங்குகளில் முதலீடு செய்யலாம்.
கூடுதலாக முதல் 50 இடங்களில் வரும் பெரும் நிறுவனங்களுக்குப் பிறகு, புதிய நிதி முதலீட்டா ளர்களை பங்கேற்க அனுமதிக்கும். நிஃப்டி நெக்ஸ்ட் 50 இன்டெக்ஸ் ஆனது நிஃப்டி 50 இன்டெக்ஸ் 13 தனித்தனி தொழில்களில் பரவியுள்ள, நிஃப்டி 100 இன்டெக்ஸின் உட்கூறுகளை தவிர்த்து, 50 நிறுவனங்களின் செயல்திறனை அளவிட வடி வமைக்கப்பட்டுள்ளது.
ஃப்ரீ- ஃப்ளோட் மார்க்கெட் கேபிடலைசேஷன் அடிப் படையில் நிஃப்டி நெக்ஸ்ட் 50 இன்டெக்ஸ், அடுத்த தலைமுறை சந்தைத் தலை வர்களை உருவாக்கும் நிறுவனங்களின் திறனை மேம்படுத்தும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.
சந்தையுடன் இணைக்கப்பட்ட வருவாயில் கூடுதலாக, நிதியின் செயலற்ற தன்மையானது முதலீட் டாளர்களுக்கு வரவிருக்கும் புளூசிப் நிறுவனங்களில் பல்வகைப்படுத்தல் மற்றும் தரமான முதலீடு களின் நன்மைகளை அனுமதிக் கிறது.
ஆக்ஸிஸ் ஏஎம்சி-யின் எம்டி மற்றும் சிஓ சந்திரேஷ் நிகம் பேசும்போது, “ஆக் ஸிஸ் எஎம்சி ஆனது, நிலையான செயல்திறனை வழங்கும் விதமாக வடிவமைக்கப்பட்ட வலு வான தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவதன் மூலம், நிறுவனத்தின் ‘பொறுப்பான முதலீடு’ என்ற தத்துவத்தை தொடர்ந்து கடைபிடித்து வருகிறோம்.
அதன்படி, ஆக்சிஸ் நிஃப்டி நெக்ஸ்ட் 50 இன்டெக்ஸ் ஃபண்ட், அடுத்த தலைமுறைத் தலை வர்களின் வளர்ச்சியை மேம்படுத்துவதற்கு கை கொடுக்கும். அதுவும், செயலற்ற உத்திகளின் முக்கியத்துவத்தை முதலீட்டாளர்கள் புரிந்துகொண்ட சமயத்தில், சந்தையின் அளவுகோல் வருவாயை இது உறுதி செய்கிறது.
இந்த நிதியா னது முதலீட்டாளர் களுக்கு நீண்ட கால செல்வத்தை உருவாக்கும் வாய்ப்புகளை வழங்கும் கூடுதல் அம்சமாக இருக்கும்” என்றார்.



