திருக்குறளின் முதல் குறளில் வரும் ஆதி பகவன் என்பதும், ரிக் வேத்தில் வரும் பரமாத்மாவும் ஒன்றுதான் எனவும், திருக்குறள் ஆன்மீக கருத்து க்கள் நிறைந்தது எனவும் ஒழுக்கத்தைப் போதிக்கிறது என்றும் கோவையில் உலக திருக்குறள் மாநாட்டை துவக்கி வைத்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.
கோவை குனியமுத் தூரில் உள்ள கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் குறள் மலை சங்கம் சார்பில் உலக திருக்குறள் மாநாடு நேற்று தொடங்கியது. இந்த மாநாட்டை தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கிவைத்தார்.
பின்னர் கல்வெட்டில் திருக்குறள் என்ற நூலை ஆளுநர் வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து 10 மாணவர்களுக்கு சிறந்த தமிழ் மாணாக்கர் சான்றிதழ்களையும், தமிழ் சான்றோர்களுக்கு விருது களையும் வழங்கினார்.
இதனைதொடர்ந்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது: தமிழகம் புண்ணிய பூமி, ஆன்மீக பூமி. இங்கு சிறந்த மனிதர்கள் இருந்துள்ளார்கள். திருவ ள்ளுவர், விவேகானந்தர், வீரபாண்டிய கட்ட பொம்மன், வ.உ.சிதம்பரம் பிள்ளை, மகாகவி பாராதி ஆகியோர் ஆன்மீகம் மூலம் இளைஞர்களுக்கு பல அறிவுரைகளை வழங்கி உள்ளனர்.
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு என்ற முதல் குறளில் வரும் ஆதி பகவனும் ரிக் வேத்தில் வரும் பரமாத்மாவும் ஒன்றுதான். திருக்குறள் ஆன்மீக கருத்துகளை பேசி இருக்கின்றது. பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையிலான விஷயங்களையும், ஒழுக்கத்தையும், நெறிமு றைகளையும் திருக்குறள் போதிக்கின்றது.
திருக்குறள் ஆன்மீக கருத்துக்கள் நிறைந்தது. அதனை அரசியல் சித்தாந்தங்களுக்காகவும, நிர்பந்தங்களுக்காகவும அதை சுருக்க கூடாது. இவ்வாறு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.
இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், தமிழில் படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கி தமிழில் படித்தால் வேலை என்ற நிலைக்கு தள்ளப்ப ட்டுள்ளோம் எனவும் அடுத்த தலைமுறைக்கு தமிழை கொண்டு செல்ல வேண்டிய அவசியம் இருக்கின்றது எனவும் தெரிவித்தார்.
இம்மாநாட்டில் 1330 திருக்குறளையும் மலையில் கல்வெட்டில் பதித்து திருக்குறள் மலை உருவாக்கப்பட வேண்டும். மலையில் கல்வெட்டில் பதிக்கப்படும் திருக்குறளை உலக நூலாக யுனெஸ்கோ நிறுவனம் அங்கீகரிக்க வேண்டும்.
உலக நூலாக அறிவிக்கப்பட இருக்கும் திருக்குறளை ஐக்கிய நாடுகள் சபை தன் உறுப்பு நாடுகள் அனைத்திலும் பாடத்திட்டமாக திருக்குறளை சேர்க்க ஆவண செய்ய வேண்டும் என மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



