fbpx
Homeபிற செய்திகள்கோவையில் இன்று முதல் தினமும் 6 ஆயிரம் கொரோனா பரிசோதனைகள்

கோவையில் இன்று முதல் தினமும் 6 ஆயிரம் கொரோனா பரிசோதனைகள்

கோவை மாநகராட்சி யில் நாள் ஒன்றிற்கு 1300 பரிசோதனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்றிலிருந்து 6000 பரிசோதனை செய்ய நடவடிக்கை மேற்கொள் ளப்படும் என மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

கோவை வ.உ.சி மைதானத்தில் வீடு வீடாக சென்று கொரோனா பரிசோதனையில் ஈடுபடும் முன்கள பணியாளர்களுக்கு சோதனை உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 500 முன்கள பணியாளர்களுக்கு வெப்பமானி, பல்ஸ் ஆக்சி மீட்டர் உள்ளிட்ட உபகரணங்களை கோவை மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா வழங்கினார்.

இதனையடுத்து முன்கள பணியாளர்கள் வீடு வீடாக சென்று என்னென்ன பரிசோதனைகள் செய்ய வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். இதனையடுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது :

மாநகராட்சி முழுவதும் வீடு வீடாக சென்று கொரோனா பரிசோதனை செய்யும் 500 முன்கள பணியாளர்களுக்கான உபகரணங்கள் வழங்கபட்டுள்ளது.
அவர்கள் மக்களின் அறிகுறிகளை கேட்டு காய்ச்சல், உடல் வெப்பம், உடலின் ஆக்சிஜன் அளவுகளை சோதனை செய்வர்.

மூன்றாவது அலையை எதிர்கொள்ள ஆர்.எஸ்.புரம் கலை அரங்கத்தில் கட்டுப் பாட்டு அறை ஏற்படுத்தப் பட்டுள்ளது.

இதில் கொரோனா சோதனை முடிவுகள் தெரிவிக்கப்படும், தொற்று ஏற்பட்டவர்களை சோதனை மையத்திற்கு செல்ல வாகன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டவர்களை தொடர்பு கொண்டு அவர்களின் நிலையை அறிந்து கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.

மக்கள் 0224585800 என்ற உதவி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும் மாவட்ட நிர்வாகத்துடன் சேர்ந்து கொடிசியாவில் 350 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மற்றொரு ஹாலிலும் 300 படுக்கை வசதிகள் இன்று தயாராகும். தொற்றின் பரவலுக்கு ஏற்ப நாள் ஒன்றிற்கு 500 முதல் 4000 வரை தொற்று உறுதியானால் 15 மருத்துவர்கள், 75 செவிலியர்கள், 10 மருத்துவ தொழில்நுட்ப பணியா ளர்கள் நியமிக்கப்படுவர்.

நாள் ஒன்றிற்கு 1300 பரிசோதனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்றிலிருந்து நாள் ஒன்றிற்கு 6000 சோதனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேலும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு தேவையான உபகரணங்கள் ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img