fbpx
Homeபிற செய்திகள்‘ஓகியும் கரப்பான் பூச்சிகளும்’ தொடர் முன்னோட்டத்துடன் கோவையில் குழந்தைகளை குஷிப்படுத்திய சோனி ஒய்ஏஒய் ‘‘பன் கி...

‘ஓகியும் கரப்பான் பூச்சிகளும்’ தொடர் முன்னோட்டத்துடன் கோவையில் குழந்தைகளை குஷிப்படுத்திய சோனி ஒய்ஏஒய் ‘‘பன் கி சவாரி’’ வேன்

விடுமுறை நாட்களை மகிழ்ச்சியுடன் கொண்டாட குழந்தைகளுக்கான கேளிக்கை நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வரும் சோனி ஒய்ஏஒய் தொலைக்காட்சியில் புகழ் பெற்ற கார்ட்டூன் தொடரான ‘ஓகியும் கரப்பான் பூச்சிகளும்’ ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடர் குழந்தைகளிடம் மிகுந்த வரவேற்பை பெற்ற தொடராகும்.

இதன் மகிழ்ச்சியை நேரடியாக குழந்தைகளுக்கு வழங்கும் விதமாக ‘‘பன் கி சவாரி’’ என்னும் நிகழ்ச்சி ஒன்றை இந்த தொலைக்காட்சி வழங்குகிறது.
இதன் மூலம் வேன் ஒன்று தமிழகம் முழுவதும் சென்று பல்வேறு போட்டிகளையும் விளையாட்டுகளையும் குழந் தைகளுக்காக நடத்துகிறது.

அதன் ஒரு பகுதியாக இந்த வேன் கோவையில் 27, 28, 29, 30 ஆகிய தேதிகளில் முகாமிட்டு குழந்தைகளுக்கு பல்வேறு போட்டிகளை நடத்தியது.
அதனைத் தொடர்ந்து தற்போது அந்த வேன் மதுரைக்கு செல்கிறது. அங்கு வரும் 4ம் தேதி முதல் 7ம் தேதி வரை முகாமிட உள்ளது.

இந்த சிறப்பு வேன், ‘ஓகியும் கரப்பான் பூச்சிகளும்’ மற்றும் ‘ஓபோச்சமா & குன்’ ஆகிய கார்ட்டூன் தொடர்களை தமிழ்நாட்டிலுள்ள அனைத்து இளம் ரசிகர்களையும் சென்றடையும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த வேன் கடந்த 15ம் தேதி தனது பயணத்தை துவங்கியது. இதன் பயணம் வரும் ஜனவரி 10ம் தேதி நிறைவடைகிறது. இந்த 25 நாள் பயணத்தில் இந்த வேன் வேலூர், திருவள்ளூர், விழுப்புரம், சேலம், திருப்பூர், கோயம்புத்தூர், திருச்சி, மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய ஊர்களுக்கு செல்கிறது.

கோவை நகருக்கு வந்த இந்த வேன் முக்கிய குடியி ருப்பு பகுதிகள் மற்றும் பிர பலமான இடங்களுக்கு சென்றது. அங்குள்ள குழந்தைகளிடம் இந்த வேன் மிகுந்த உற்சாகத்தை கொண்டு வந்தது.

இந்த வேனில் அற்புதமான நிகழ்ச்சி-களும் குழந்தைகளுக்கான விளையாட்டுகளும் இடம் பெற்றது. அத்துடன் குழந் தைகளின் விருப்பமான கதா பாத்திரமான ‘ஒபோச்சமா –-குன்’ தொடரின் சிறப்பு முன்னோட்டமும் இடம் பெற்றது.

இந்தப் பயணத்தின் போது வேன் சென்ற ஒவ்வொரு இடத்திலும் குழந்தைகள் தங்களுக்குப் பிடித்தமான நிகழ்ச்சிகளைப் பார்த்து ரசித்தனர். மேலும் பல்வேறு விதமான விளையாட்டுகளில் கலந்து கொண்டும், தங்களுக்கு பிடித்தமான கதாபாத்திரங் களையும் பார்த்தும் மகிழ்ந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img