fbpx
Homeபிற செய்திகள்தஞ்சையில் 44,500 பயனாளிகளுக்கு நலஉதவி வழங்கி முதல்வர் ஸ்டாலின் பேச்சு: காவிரி உரிமையை மீட்டுத்தந்தது திமுக...

தஞ்சையில் 44,500 பயனாளிகளுக்கு நலஉதவி வழங்கி முதல்வர் ஸ்டாலின் பேச்சு: காவிரி உரிமையை மீட்டுத்தந்தது திமுக தான்

44,525 பயனாளிகள் பயன்பெறும் வகையில் 238 கோடியே 40 லட் சத்து 95 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அப்போது அவர் பேசுகையில். காவிரி உரிமையை மீட்டுத்தந்தது திமுக தான் என்று தெரிவித்தார்.

தஞ்சைக்கு நேற்று மாலை சென்ற முதல்வர் மு.க. ஸ்டாலின், மூப்பனார் சாலையில் உள்ள கலை ஞர் அறிவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் கருணாநிதி சிலைகளை திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து கட்சி அலுவல கத்திற்குச் சென்று வருகைப்பதிவேட்டில் கையொப்பமிட்டார்.

இன்று தஞ்சை மன் னர் சரபோஜி அரசு கல்லூரி மைதானத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்று 44,525 பயனாளிகள் பயன்பெறும் வகையில் 238 கோடியே 40 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் வழங்கினார்.

மேலும் 98 கோடியே 77 லட்ச ரூபாய் மதிப்பிலான 90 முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தார். ரூ.894 கோடியில் 134 திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டியுள்ளார்.

அதன் பின் இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதா வது: ராஜராஜ சோழனோடு தஞ்சை மண்ணையும் பெருமைப்படுத்தியது திமுக அரசு.
1970ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றத்தை அமைக்க வைத்தவர் கலைஞர் தான், தமிழ்நாட்டுக்கு எவ்வளவு காவிரி நீர் வழங்க வேண்டும் என்பதை நிர்ணயிக்கும் இடைக்கால தீர்ப்பை பெற்றுத்தந்தவரும் கலைஞர் தான்.

தண்ணீரை கர்நாடகம் ஒழுங்காகத் தருகிறதா என்பதை கண்காணிக்கும் ஆணையத்தை 1997ல் அமைக்கச்செய்தவரும் கலைஞர் தான்.
இறுதித் தீர்ப்பை பெற்றுத்தந்ததும் அவர் தான்.
இப்படி காவிரி உரிமையை காப்பாற்றியது திமுக தான்.

மேலும், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பயனாளிகளில் 5000 பேர் மட்டுமே நிகழ்ச்சிக்கு வரவழைக்கப்பட்டனர். எஞ்சிய பயனாளிகளுக்கு ஓரிரு நாளில் வீடுதேடி நலத்திட்ட உதவிகள் வரும்.

தமிழக அரசின் நடவடிக்கையால் இந்த ஆண்டு குறுவை சாகுபடி சாதனை படைத்துள்ளது. 48 ஆண்டுகளுக்கு பிறகு 1 லட்சத்து 66 ஆயிரத்து135 ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு இருப்பது பெரும் சாதனையாகும்.

அதற்கு தமிழக அரசின் நடவடிக்கையும் காரணமாகும். மானிய விலையில் நெல் விதைகளைத்தந்தோம். மேலும் நிதி நெருக்கடி இருந்தபோதிலும், ரூ.83 கோடி செலவில் நெல் கொள்முதல் நிலைய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்பட்டது.

நெல் கொள்முதல் நிலையத்தில் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு ஒரு மூட்டைக்கானகூலியாக ரூ.3.25 லிருந்து ரூ.10 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. நெல் சாகுபடி பரப்பு 3.12 லட்சம் ஏக்கரில் இருந்து 3.42 லட்சம் ஏக்கராக உயர்ந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

தமிழகத்தில் நெல் சாகுபடி பரப்பை அதிகரிப்பதில், இந்த ஆறு மாதகாலத்தில் அரசு மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி, சட்டத் துறை அமைச்சர் எஸ். இரகுபதி, உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சுற்றுச் சூழல் – காலநிலை மாற்றத் துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம் பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், அரசு தலைமைக் கொறடா முனைவர் கோவி. செழி யன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், செ. ராமலிங்கம், எஸ். சண்முகம், எம்.எம்.அப்துல்லா, சட்டமன்ற உறுப்பினர்கள் துரை. சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், க.அன்பழகன், கா. அண்ணாதுரை, என். அசோக்குமார், பூண்டி கே. கலைவாணன், முனைவர் எம்.எச். ஜவாஹிருல்லா, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மாவட்ட ஊராட்சி மன்றத் தலைவர் உஷா புண்ணியமூர்த்தி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டன

இதனையடுத்து ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்டு வரும் இரண்டாம் உலக போர் நினைவுச் சின்ன மான மணிக்கூண்டு உடன் கூடிய ராஜப்பா பூங்கா மற்றும் கீழவாசல் பகுதியில் கட்டப்பட்டுள்ள சரபோஜி மார்க்கெட் உள்ளிட்டவற்றை திறந்து வைத்தார்.

படிக்க வேண்டும்

spot_img