கலைநயமிக்க நகைகளின் கண்காட்சி நாகர் கோவில் மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் ஷோரூமில் வரும் 27-ம் தேதி நடைபெறுகிறது.
தலைசிறந்த நகை வடிமைப்பாளர்களால் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த நகைகள் ஒவ்வொன்றும் அந்த கலைஞர்களின் நிபுணத்துவத்தையும் தனிப்பட்ட திறன்களையும், அனைத்து நகைகளிலும் ஒரு கலைநயம் இருக்கிறது என்பதை நிரூபிக்கும் வகையிலும் உள்ளன.
கண்காட்சியை முகமது பஷீர், பாலா ராஜ்குமார், ஜார்ஜ் அந்தோணி, தீஷா, உமா, தி.பாக்கியலட்சுமி, மேரி நிமில்டா, மெல்பா ஹெனி, ஸ்ரீ சுதன், மர் ஜானா ஆகியோர் துவங்கி வைத்தனர்.
நாகர்கோவில் மலபார் கோல்டு, டைமண்ட்ஸ் கிளை தலைவர் ரினீத், துணைத் தலைவர் மார்ட்டின் பாபு, வர்த்தக மேலாளர் துவாரகாநாத், விற்பனை மேலாளர் ராஜேஷ் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர்.
கண்காட்சி கலைகளில் ஆர்வமுள்ளவர்களின் கண்களுக்கு விருந்தாக அமையும். வரும் 27-ம் தேதி வரை நடைபெறும். கண்காட்சியில் இடம் பெற்றுள்ள நகைகளை வாடிக்கையாளர்கள் சிறப்பு விலையில் வாங்கலாம்.
அணிந்தாலே ஜொலிக் கும் வைர நகைகளான ‘மைன்’, பிரம்மாண்டமான வடிவமைப்புகளை கொண்டுள்ள வெட்டாத வைரத்தால் செய்யப்பட்ட ‘எரா’ மிகவும் பொக்கி ஷமாக கருதப்படும் விலை உயர்ந்த கற்களால் செய்யப் பட்ட நகை தொகுப்பான ‘பிரீசியா’ நகைகள், கைவினை கலைஞர்களால் கையால் செய்யப்பட்ட நகைகளின் தொகுப்பான ‘எத்தினிக்’, கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் பாரம்பரிய இந்திய நகை வடிமைப் புகளில் உருவான’டிவைன்’ குழந்தைகளுக்கான நகை தொகுப்பான ‘ஸ்டார் லெட்’ ஆகியவை இடம் பெற்றுள்ளன.
இதைத்தவிர அழகிய நகைகளை சிறப்பு சலு கையில் வாங்கவும் வாய்ப் பளிக்கப்படுகிறது.
மலபார் கோல்டு, டைமண்ட்ஸ் தற்போது 10 நாடுகளில் 270க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை நிலையங்களுடன் உலகில் மிகப்பெரிய நகை விற்பனை நிறுவனமாக உருவெடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், சேலம், திருச்சி, ஈரோடு, வேலூர், இராமநாதபுரம், ஈரோடு, தருமபுரி, தஞ்சாவூர், கும்பகோணம், ஆகிய நகரங்களில் 17 கிளைகளை கொண்டுள்ளது.



