இந்தியாவில் 236 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட் டுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மேலும் 33 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கொரோனா ஓரளவுக்கு தடுப்பூசி மூலம் கட்டுக்குள் வந்துள்ள நிலையில், அதன் உருமாறிய வைர சான ஒமைக்ரான் உலக நாடுகளை தற்போது அச்சுறுத்தி வருகிறது.
இதில் ஒமைக்ரான் வகை தொற்று வெளிநாடுகளிலிருந்து திரும்பும் பயணிகள் மூலம் இந்தியாவிலும் பரவத் தொடங்கி விட்டது. இதனால் மக்கள் பெரும் பீதியில் உள்ளனர்.
இதில் குறிப்பாக ஒமைக்ரான் குறித்து ஒன்றிய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப் பில், ‘‘ஒமைக்ரான் வகை தொற்றால் இந்தியாவில் 236 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 104 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
தொடர்ந்து 132 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 65, டெல்லியில் 64 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் ஒமைக்ரான் பரவ தொடங்கி உள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று முக்கிய ஆலோசனை மேற் கொள்ள உள்ளார்.
இதற்கிடையில் தமிழ் நாட்டில் மேலும் 33 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. புதிதாக ஒமைக்ரானால் பாதிக்கப் பட்ட 33 பேரில் 3 பேர் தமிழ்நாட்டிலேயே இருப்பவர்கள், ஒருவர் கேரளாவில் இருந்து திரும்பியவர் ஆவார்.
4 பேரை தவிர எஞ்சியவர்கள் வெளிநாடுகளில் இருந்து வந்த நிலையில் ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்த 114 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 33 பேருக்கு ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
114 பேரில் 57 பேருக்கு எஸ்.ஜீன் மாற்றம் ஏற்பட்டது. 57 பேருடன் தொடர்பில் இருந்த 3 பேர் என மொத்தம் 60 பேருக்கு ஒமைக்ரான் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
பரிசோதனை முடிவில் 33 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிதாக 33 பேர் பாதிக்கப்பட்டதை அடுத்து தமிழ்நாட்டில் ஒமைக்ரான் தொற்று ஏற்பட்டவர்கள் எண்ணிக்கை 34ஆக உயர்ந்துள்ளது.
ஏற்கனவே நைஜீரியாவில் இருந்து வந்தவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய் யப்பட்டது. ஒமைக்ரான் தொற்று ஏற்பட்ட 34 பேருக்கும் முதல்நிலை பாதிப்பு மட்டுமே உள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்ட 34 பேரில் 26 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். ஒமைக்ரான் பரவல் மிக வேகமாக இருக்கும் ஆனால் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தாது என்பது மருத்துவ நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
மக்கள் அச்சப்படாமல் தங்களை தாங்களே பாதுகாத்து கொள்ள வேண்டும், முகக்கவசம், தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண் டும் என்பதும் அவர்களின் அறிவுறுத்தலாக உள்ளது.



