தலைமைச் செயலகத்தில் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் தமிழ் இணையக் கல்விக் கழகம் சார்பில், தமிழ்நாட்டில் பயிலும் 6 முதல் 12ம் வகுப்பு வரையுள்ள பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் அனைத்து வகையான கல்லூரி மாணவ மாணவியர்களுக்கும், குறட்பாக்களின் பொருளை மையமாகக் கொண்டு நடத்தப்படும் மாநில அளவிலான “குறளோவியம்“ ஓவியப் போட்டியினை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வினில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர் மகேசன் காசிராஜன், தமிழ் இணையக் கல்விக் கழக இயக்குநர் ஜெயசீலன், மற்றும் துறை உயர் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.



