யூனிவர்சல் பிரஸ் மீடியா எஜுகேஷன் வித்யாபீட் (Affliated with Shine University) சார்பில், சமூக சேவையில் பல சாதனைகள் படைத்தவர்களுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவிக்கும் விழா பாண்டிச்சேரியில் நடந்தது.
அதில் மனித நேயத்திற்கான டாக்டர் பட்டத்தினை ஈரோடு மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் (முழு கூடுதல் பொறுப்பு) ஏ. விஜயசக்திக்கு, பாண்டிச்சேரி மாநில சபாநாயகர் ஆர்.செல்வம் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் விவசாயத்துறை அமைச்சர் சி.டி.விஜயகுமார், நீதியரசர் ஏ.கே.என்.வைத்தியநாதன், அம்பாசிடர் விஜய்ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



