கோவை மாவட்டம் ஒத்தக்கால் மண்டபத்தில் அமைந்துள்ள இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் தேசிய அளவிலான என்.சி.சி. தலைமைப் பண்பு பயிற்சி முகாம் நடந்து வருகிறது.
கோவை குரூப் கமாண்டர் கர்னல் எல்சிஎஸ் நாயுடு, முகாமினை துவக்கி வைத்தார். விமானப்படை அதிகாரி விங் கமாண்டர் நிதின், தமிழ்நாடு பீரங்கிப் படை கமாண்டிங் ஆபீசர் கர்னல் சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கல்லூரி முதல்வர் முனைவர் ஜெயா, தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் முனைவர் நடராஜன், டீன் முனைவர் மகுடேஸ்வரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
வரும் டிசம்பர் 4-ம் தேதி வரை இந்த முகாம் நடைபெறுகிறது.
இதில் தலைமைப் பண்பு, கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ், யோகா, பேச்சுத் திறமை, ஆளுமை, பொது அறிவு, கலந்துரையாடல் பயிற்சி, போட்டித் தேர்வு வழிமுறைகள், ராணுவத்தில் சேர்வதற் கான எஸ்எஸ்பி பயிற் சிகள் ஆகியவை கொடுக்கப்படும்.
பயிற்சியின் இறுதியில் தேர்வு வைக்கப்பட்டு சிறந்த பயிற்சி பெறும் மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கப்படும்.
தமிழகம், கேரளா, கர்நாடகா மாநிலங்களைச் சார்ந்த சுமார் 300 பேர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
முகாம் ஏற்பாடுகளை என்சிசி அலுவலர்கள் மனோஜ், பிளையிங் ஆபீசர் ஜெய்னுலாப்தின் ஆகியோர் செய்திருந்தனர்.



