fbpx
Homeபிற செய்திகள்‘வால்வோ தமிழ்நாடு’ ஷோரூம்- கோவையில் திறப்பு

‘வால்வோ தமிழ்நாடு’ ஷோரூம்- கோவையில் திறப்பு

சுவீடன் நாட்டைச் சேர்ந்த சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான வால்வோ கார் இந்தியா நிறுவனம் தனது புதிய ‘வால்வோ தமிழ்நாடு’ என் னும் ஷோரூமை கோவை அவினாசி சாலையில் திறந்துள்ளது. தமிழகத்தில் திறக்கப்படும் 2வது ஷோ ரூம் இதுவாகும்.


தமிழகத்தைப் பொறுத் தவரை ஆடம்பர பொ ருட்களுக்கான சிறந்த சந்தையாக கோவை நகரம் திகழ்ந்து வருகிறது.


வசதி படைத்த மற்றும் ஆடம்பர பொருட்கள் மீது அதிக ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் இங்கு அதிக அளவில் உள்ளனர்.


இதனை கருத்தில் கொண்டு இந்த புதிய ஷோரூமை வால்வோ கார் இந்தியா நிறுவனம் கோவையில் திறந்துள்ளது. இந்த புதிய அதிநவீன ஷோரூம் தனித்துவமிக்க ஸ்வீடன் நாட்டின் ஆடம்பர அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் விதமாக வடி வமைக்கப்பட்டுள்ளது.


இதன் விற்பனை பிரிவு 7 ஆயிரம் சதுர அடியிலும், கார்களுக்கான பராமரிப்பு சேவை மையம் 13 ஆயிரம் சதுர அடியிலும் திறக்கப்பட்டுள்ளது. இங்கு இந்நிறுவனத்தின் எஸ்90, எக்ஸ்சி60 மற்றும் எக்ஸ்சி90 ஆகிய 3 மாடல்களில் மிதமான & கலப்பின பெட் ரோல் கார்கள் விற்பனை செய்யப்பட உள்ளது.


இந்த புதிய ஷோரூமை வால்வோ கார் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஜோதி மல்ஹோத்ரா திறந்து வைத் தார்.

இது குறித்து பேசிய வால்வோ தமிழ்நாடு ஷோரூம் இயக்குனர் விஷ்ணு கூறுகையில், தமிழ் நாட்டிலுள்ள எங்களின் வாடிக்கையாளர்களுக்கு அதிநவீன தொழில்நுட்பத் துடன் கூடிய பாது காப்பான கார்களை வழங்குவதற்காக வால்வோ கார் இந்தியாவுடன் நாங் கள் இணைந்திருப்பது எங் களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது, என்றார்.


கோவையில் திறக்கப் பட்டுள்ள இந்த ஷோரூமில் இந்நிறுவனம் இதன் சொகுசு கார்களான செ டான் எஸ்.90, நடுத்தர சொகுசு எஸ்யூவி காரான எக்ஸ்.சி.60 மற்றும் எஸ்யூவி சொகுசு காரான புதிய வால்வோ எக்ஸ்.சி.90 ஆகிய கார்களை விற்பனை செய்கிறது.

படிக்க வேண்டும்

spot_img