கோவை மாவட்டம் ஒத்தக்கால் மண்டபத்தில் அமைந்துள்ள இந்துஸ்தான் இன்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்பக் கல் லூரியின் என்.சி.சி மாணவர்கள் சார்பாக இந்திய அரசியலமைப்பு நாள் உறுதிமொழி எடுக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதல்வர் முனைவர் ஜெயா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உறுதிமொழியை வாசித் தார். கல்லூரியின் டீன் மருடேஸ்வரன், இந்துஸ்தான் டெக்னாலஜி கல்லூரியின் முதல்வர் முனைவர் நடராஜன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.
பேராசிரியர்கள், என்.சி.சி மாணவர்கள், அனைத்து துறை மாணவர்கள் அலுவலகப் பணியாளர்கள் என அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் என்.சி.சி அலுவலர் பிளையிங் ஆபிசர் ஜெய்னுலாப்தீன் மற்றும் மனோஜ் ஆகி« யார் செய்திருந்தனர்.



