கடத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை கூடுதல் ஆட் சியர் (வளர்ச்சி) மரு. வைத்தியநாதன் ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது, ஒசஅள்ளி ஊராட்சியில் ரூ.3 கோடியே 9 லட்சம் மதிப்பீட்டில் நடைபெறும் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்டும் பணி, வகுத்துப் பட்டி ஊராட் சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் ரூ. 1 லட்சத்து 35 ஆயிரம் மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் சமு தாய பண்ணை குட்டை அமைக்கும் பணி மற்றும் இராமியனஅள்ளி ஊராட்சியில் ரூ.1 கோடி யே 73 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பீட்டில், பிரதம மந்திரி சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் சாலை அமைக்கும் பணி ஆகியவற்றை பார்வையிட் டார்.
மேலும் வகுத்துப்பட்டி ஊராட்சி அலுவலகத்தில் நடைபெற்றுவந்த கொ ரோனா தடுப்பூசி முகாம் பணியினையும் மற்றும் இராமியனஅள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்று வந்த கொரோனா தடுப்பூசி முகாமையும் கூடுதல் ஆட் சியர் பார்வையிட்டார்.
அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவிச்சந்திரன் மற்றும் ரங்கநாதன், பொறியாளர் கள் சண்முகம், சுமதி மற்றும் பணி மேற் பார்வையாளர்கள் அன்ன பூரணி, அன்பழகன் ஆகி யோர் உடன் இருந்தனர்.



