நாட்டுக்கோழி பண் ணை அமைத்து தருவதாக மோசடி செய்த வழக்கில் நான்கு பேருக்கு தலா ஒரு நாள் சிறை தண்டனையும், அபராதமும் விதித்து கோ வை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் அன்பு பவுல்ட்டரி பார் ம்ஸ் என்ற பெயரில் நாட் டுக்கோழி பண்ணை நிறு வனத்தை கடந்த 2012ம் ஆண்டு நடத்தி 107 முதலீட்டாளர்களிடம் ரூ.2.25 கோடி மோசடி நடைபெற்றது.
இந்த வழக்கில் நிறு வனத்தை நடத்தி வந்த ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த சசி, ஆனந்தன், செந்தில்குமார் ஆகிய 3-பே ருக்கு தலா ஒரு நாள் சிறை தண்டனையும், ரூ.4.95 லட் சம் அபராதம் மூவரும் சேர்ந்து செலுத்தவும் கோவை தமிழ்நாடு முதலீட் டாளர்கள் நல பாதுகாப்பு சட்டம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதில் ரத்தினசாமி என்பவர் விடுதலை செய் யப்பட்டுள்ளார்.
ரூ.1.50 லட்சம் செலுத்தினால், செட் அமைத்து கொடுத்து, 3750 நாட்டுக்கோழி குஞ்சுகள் கொடுத்து, அதற்குத் தே வையான மருந்துகள், தீவ னங்கள் ஆகியவற்றை யும் கொடுத்து, மாதம் மற்றும் ஆண்டுதோறும் 9,000 ரூபாய் ஊக்கத் தொகையாகக் கொடுப் பதாகவும், மூன்று வருட கால ஒப்பந்தம் என விளம் பரம் செய்து மோசடி செய் யப்பட்டது.
முதலீட்டாளர்களுக்குக் கடந்த 9 ஆண்டுகளில் சிறுக சிறுக பணம் கொ டுத்து முழுவதுமாக மோசடி செய்யப்பட்ட தொகை செலுத்தப்பட்டது.
அதனால், மோசடி பிரிவிற்கு மட்டும் தண் டனை பெற்ற 3 பேருக்கும் தலா ஒரு நாள் சிறைத் தண்டனையும், 4 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் அப ராதம் 3 பேரும் சேர்ந்து செலுத்தவும் உத்தர விடப்பட்டுள்ளது.
அபராத தொகை கட்ட தவறினால் இரண்டு ஆண்டுகள்சிறை தண்டனை அனு பவிக்க வேண்டும் என் றும் நீதிமன்றம் தீர்ப்பு வழங் கியது குறிப்பிடத்தக்கது.



