சர்க்கார் சாமக்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கீரணத்தம் ஊராட்சியில் கோவை பாராளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து 12.63லட்சம் மதிப்பீட்டில் நியாயவிலைக் கடைக்கான புதிய கட்டிட திறப்பு விழா நடைபெற்றது.
இந்த நியாயவிலைக் கடை கட்டிடத்தை கோவை பாராளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்
இந்த நிகழ்ச் சியில் கீரணத்தம்ஊராட்சி மன்ற தலைவர் ராசு( எ)பழனிச்சாமி திமுக மேற்கு மாவட்ட பொறுப் பாளர் பையா( எ) கிருஷ்ணன், ஒன்றிய கவுன்சிலர் கருப்புசாமி, வட்டார வளர்ச்சி அதி காரிகள் அனிதா மற்றும் தனலட்சுமி ஊராட்சி மன்ற துணை தலைவர் கோபால் கீரணத்தம் ஊராட்சி செயலாளர் பாலாஜி மற்றும் வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்



