தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 4ம் தேதி வருகிறது. அதற்கு முன்பாகப் பள்ளிகள் திறக்கப்படவுள்ளது, பெற்றோர் மத்தியில் சிறிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அரசுப் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் சிலர் கூறுகையில், பள்ளிகள் திறக்கப்பட்டால் வெளிமாவட்டங்கள், ஊர்களில் தங்கியுள்ள மாணவர்கள், பெற்றோர்கள் தங்கள் பகுதிகளுக்குத் திரும்புவார்கள்.
இது நோய்த்தொற்று பரவலுக்கு வழிவகுக்கும். எனவே பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்ற கருத்தை முன்வைத்துள்ளனர்.
தமிழ்நாடு பெற்றோர், மாணவர் நல சங்கத்தின் தலைவர் அருமை நாதன் கூறும்போது, பண்டிகை காலங்களில் கூட்ட நெரிசலைத் தவிர்க்க முடியாது. எனவே பள்ளிகளை ஒரு வாரம் ஒத்திவைத்து திறப்பதற்கு தமிழக அரசு பரிசீலனை செய்ய வேண்டும்என வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக பள்ளி கல்வி அதிகாரிகள் கூறுகையில்,பள்ளிகள் திறப்பை ஒத்தி வைக்கும் எண்ணம் எதுவும் தற்போது இல்லை.
எனினும் தொடர் கோரிக்கைகள் வருவதால் அரசுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்` என்று கூறினார். தீபாவளிக்கு பின் பள்ளிகளைத் திறக்கலாமே?



