fbpx
Homeபிற செய்திகள்புதிய விலைப் பட்டியலை வெளியிட்டது ஜீ என்டர்டெயின்மென்ட்

புதிய விலைப் பட்டியலை வெளியிட்டது ஜீ என்டர்டெயின்மென்ட்

முன்னணி இந்திய ஊடக மற்றும் பொழுதுபோக்கு பவர் ஹவுஸ் ஆன ஜீ என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ் லிமிடெட், இந்தியா முழுவதும் உள்ள பார்வை யாளர்களின் பொழுதுபோக்கு விருப்பங்களுக்கு ஏற்ப சேவை வழங்குவதற்கு, மும்பை உயர்நீதி மன்ற உத்தரவின்படி புதிய கட்டண ஆணை 2.0-க்கு இணங்க, புதிய ஏ-லா-கார்ட் சேனல் மற்றும் காம்போ விலையை வெளியிட்டது.

ஜீ குரூப்ஆஃப் சேனல்கள் 11 மொழிகளில் 67 சேனல்களின் பரந்த நெட்வொர்க் தடம் கொண்ட பல பார்வையாளர் பிரிவுகள் மற்றும் சலுகைகளுடன் சிறந்த பொழுது போக்குகளை வழங்குகின்றன.

ஒரு பான் இந்தியா நெட் வொர்க்குடன் வாரந்தோறும் 606 மில்லியன் பார்வையாளர்கள் மற்றும் வாராந்திர நுகர்வு எண்ணிக்கையாக, 163 பில்லியன் நிமிடங்களை உள்ளடக்கியுள்ளது.

ஜீ என்டர்டெயின் மென்ட் எண்டர் பிரைசஸ் லிமிடெட்-ன் தெற்காசியா வணிகத் தலைவர் ராகுல்ஜோஹ்ரி பேசியதாவது: தேசிய மற்றும் பிராந்திய சேனல்களை வளப்படுத்தி,பொழுது போக்கு மற்றும் உயர்தர உள்ளடக்கத்தை வழங்குவதன் மூலம் முழு சுற்றுச் சூழல் அமைப் பிற்கும் தொ டர்ந்து மதிப்பை உரு வாக்குவோம்.

என்டிஒ 2.0 -ஐ அமல்படுத்திய பிறகு, ஜீ சேனல்கள் சந்தையில், அதன் வளர்ச்சி வேகத் தைத் தொடரும். நிறுவனத்திற்கு அதிக மதிப்பை உருவாக்கும் என்று நம்புகிறோம் என்றார்.

முதன்மை விற்பனை வருவாய் அதிகாரி அதுல்தாஸ் கூறுகையில், 2019-ல் புதிய விலை நிர்ணயம் இந்தியாவில் தொலைக்காட்சியை உட்கொள்ளும் விதத்தில் பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது.

ஒருபுறம், இதுசேனல்களின் எம்ஆர் பி-யில் வெளிப்படைத் தன்மையைக் கொண்டு வந்துள்ளது. மறுபுறம் நுகர்வோருக்கு அவர்கள் பார்க்க வேண்டிய சேனல்களைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தை வழங்கியுள்ளது.

என்டிஒ 2.0உடன், சேனல்களைத் தேர்ந்தெடுப்பதில் நுகர்வோர் இன்னும் நெகிழ் வுத் தன்மையைப் பெறுவார்கள். ஜி கஃபே மற்றும் ஃப்ளிக்ஸ் போன்ற பிரீமியம் ஆங்கில சேனல்கள் தனி ஆச்சரியங்களுடன் தொடர்ந்து கிடைக்கும்.

ஜிஇசி, திரைப்படங்கள், செய்திகள், இசை மற்றும் வாழ்க்கைமுறை வகைகள் உட்பட சேனல்களின் கலவையாக இருக்கும் என்றார்.

இந்தி, ஆங்கிலம் மற்றும் பிராந்திய மொழி களில் மிகப் பெரிய திரைப்பட சேனல் போர் ட்ஃபோலியோவைக் கொண்டிருப்பதால், அடுத்த சில மாதங்களில் அதன் சேனல்களில் 40 உலக தொலைக் காட்சி பிரீமியர்களை வழங்கும்.

படிக்க வேண்டும்

spot_img