fbpx
Homeபிற செய்திகள்காவேரிப்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் வெளியேற்றம்: மாவட்ட ஆட்சியர் ஆய்வு பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

காவேரிப்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் வெளியேற்றம்: மாவட்ட ஆட்சியர் ஆய்வு பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

ராணிப்பேட்டை மாவட்டம் திருமால்பூர் ஏரிக்கு செல்லும் நீர் வரத்துக் கால்வாயில் தண்ணீர் அதிகளவு செல்வதை மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கர பாண் டியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நெமிலி வட்டம் திருமால்பூர் பகுதியில் உள்ள கோவிந்தவாடி ஏரிக்கு செல்லும் கால்வாயில் தரைப் பாலத்துக்கு மேல் அதிக அளவு தண்ணீர் செல்வதால் அப்பகுதியில் உள்ள மக்கள் விவசாய நிலத்திற்கு கால்நடைகளை கொண்டு செல்வதில் சிரமம் இருப்பதாக தெரிவித்ததை தொடர்ந்து அந்த இடத்தை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். உடனடியாக இதற்கான நடவடிக்கை எடுப்பதாக அப்பகுதி மக்களிடம் உறுதி அளித்தார்.

அதனைத் தொடர்ந்து பாலாற்றில் இருந்து கால்வாய்கள் மூலம் திருமால்பூர் ஏரிக்கு வரக்கூடிய நீர்வரத்துக் கால்வாய்களை உரிய முறையில் பராமரிப்பு செய்து உள்ளார்களா? என திருமால்பூர் புதுப்பேட்டை சாலைப் பகுதியிலும் கீழ்ப்பாக்கம் திருமால்பூர் ஏரி கதவணைகளையும் மாவட்ட ஆட்சித் தலைவர் பாஸ்கர பாண்டியன் நேரில் ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தின் மூன்றாவது பெரிய ஏரியான காவேரிப்பாக்கம் ஏரியில் இருந்து 490 கனஅடி நீர் வெளியேற்றப் படுகிறது. ஏரி மற்றும் கால்வாய் ஓரம் வசிக்கக்கூடிய மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

ராணிப்பேட்டை மாவட் டத்தில் உள்ள 379 ஏரிகளில் 81 ஏரிகள் முழுமையாக நிரம்பி உள்ளன. 28 ஏரிகள் 75 சதவீதமும் 44 ஏரிகள் 50 சதவீதமும் 72 ஏரிகள் 25 சதவீதமும் 145 ஏரிகள் 25 சதவீதத்துக்கு கீழேயும் தண்ணீர் நிரம்பியுள்ளது.

வாலாஜா பாலாறு அணைக் கட்டு பகுதியில் பாலாற்றில் 6 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. பாலாறு அணைக் கட்டில் இருந்து காவேரிப்பாக்கம், மகேந்திரவாடி, கோவிந்தவாடி ஆகிய ஏரி கால்வாய்கள் வழியாக சுமார் 2500 கன அடி தண்ணீர் திருப்பி விடப்பட்டுள்ளது.

மேலும் சுமார் 4000 கனஅடி தண்ணீர் பாலாற்றில் திருப்பி விடப்பட்டுள்ளது. ஆகவே கரையோரம் உள்ள கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரம் உதவி செயற்பொறியாளர் பிரபாகரன், வட்டாட்சியர் ரவி, உதவிப் பொறியாளர் கண்ணன் உள்ளிட்ட அலுவலர்கள் உடனி ருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img