பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாள் விழா அக்டோபர் மாதம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அவருக்கு வாழ்த்துத் தெரிவிக்கும் வகையிலும், கடந்த 20 ஆண்டுகளாக பிரதமரின் சாதனைத் திட்டங்களை வாழ்த்தியும் தமிழகம் முழுவதிலும் இருந்து தபால் நிலையங்கள் மூலம் வாழ்த்து அட்டைகள் அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.
பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தலின்படி பா.ஜ.க. கல்வியாளர் பிரிவு மாநிலத் தலைவர் தங்க கணேசன் ஆலோசனைப்படி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழகம் முழுவதும் இருந்து ஒரு கோடி வாழ்த்து அட்டைகள் அனுப்பப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக தர்மபுரி மாவட்ட பா.ஜ.க. கல்வியாளர் பிரிவு சார்பாக வாழ்த்து அட்டைகள் அனுப்பும் நிகழ்ச்சி தர்மபுரி மாவட்ட தலைமை தபால் நிலையத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு தர்மபுரி மாவட்ட பா.ஜ.க. கல் வியாளர் பிரிவு செயலாளர் ஏ.இம்மானுவேல் தலைமை தாங்கினார். தபால் நிலையத்தில் தனியாக வைக்கப்பட்டிருந்த கவுன்டரில் இருந்து வாழ்த்து அட்டை அனுப்பும் பணியினை பா.ஜ.க. கல்வியாளர் பிரிவு மாநில செயலாளர் அருணகிரி தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க. மாவட்ட பொறுப்பாளர்கள் ரமேஷ் வர்மா, செல்லப்பாண்டியன், நாகராஜன், கணேசன், முரளி மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதேபோன்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பெறப்பட்ட வாழ்த்து தபால் அட்டைகள் அனைத்தும் பொறுப்பாளர்கள் மூலம் பிரதமருக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
அதன்படி தர்மபுரி மாவட்டத்திலிருந்து 21,000 வாழ்த்து அட்டைகள் பிரதமர் மோடிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதேபோன்று தர்மபுரி மாவட்ட கல்வியாளர் பிரிவு சார்பாக மாவட்ட செயலாளர் ஏ இம்மானுவேல் தலைமையில் மாவட்ட பொதுச் செயலாளர் ஏ.கலைச்செல் வன் முன் னிலையில் காரிமங்கலம் ஒன்றியம் பெரியாம்பட்டி தபால் நிலையத்தில் இருந்து பிரதமருக்கு வாழ்த்து அட்டைகள் அனுப்பப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய பொருளாளர் எஸ். கார்த்திக், பிரச்சார பிரிவு மாவட்ட செய லாளர் சுரேஷ், ஒன்றிய பொறுப்பாளர்கள் அன்புமணி, சுரேஷ்பாபு, நல்லம்பள்ளி ஒன்றிய தலைவர் பழனிசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் பாப் பாரப்பட்டியில் மாவட்ட கல்வியாளர் பிரிவு செயலாளர் ஏ.இம்மானுவேல் தலைமையில் பிரதமருக்கு வாழ்த்து அட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நிர்வாகிகள் சிவக்குமார், மணி, கிரேன்குமார், கோவிந்தசாமி, கிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



