வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் சார்பில் பயனாளிகளுக்கு பயிர் கடன் உள்ளிட்ட பல்வேறு கடனுதவிகளை வழங்கினார்.
உடன் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, தலைவர், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் குறிஞ்சி என்.சிவகுமார், அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம், மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணராஜ் உட்பட பலர் உள்ளனர்.



