ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்பத்தூர் ஸ்பெக்ட்ரம் சார்பில், கோவை மாநகராட்சி, கிழக்கு மண்டலம், வார்டு எண்.34-க்கு உட்பட்ட வீரியம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநி லைப்பள்ளியில் புதிய தாக கட்டப்பட்டுள்ள வகுப்பறை கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது.
கட்டிடத்தை தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, திறந்து வைத்தார்.
மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் என்.கீதா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்பத்தூர் ஸ்பெக்ட்ரம் சங்கத்தலைவர் பாவிக் மொமயா கூறியதாவது:ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்பத்தூர் ஸ்பெக்ட்ரம் மற்றும் அதன் நிறுவன சமூக பொறுப்பு இணையான பேக்கர் அண்டு ஹியூக்ஸ் உடன் இணைந்து வீரியம் பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ரூ.35 லட்சம் செலவில் இரண்டு வகுப்பறைகள், கழிப்பறைகள் மற்றும் தலைமை ஆசிரியர் அறை கட்டிக் கொடுக்கப்பட்டது.
இந்த புதிய வசதிகள் இப்பள்ளியில் படிக்கும் 305 மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றார்.
ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்பத்தூர் ஸ்பெக்ட்ரம் செயலாளர் டி.முரளி பாலகிருஷ்ணன், கோவை ஈச்சனாரி, பேக்கர் அண்டு ஹியூக்ஸ் நிறுவனத்தின் மூத்த ஆலை மேலாளர் (தயாரிப்பு) மணிஷ் காஷ்யப், ரோட்டரி 3201 மாவட்ட சமூக சேவை தலைவர் எஸ். சுப்பிரமணியம், ரோட்டரி மாவட்டம் 3201 மண்டலம் 1 இயக்குனர், பி.குமரேசன், ரோட்டரி மாவட்டம் 3201, வகுப்பறை புனரமைப்பு மற்றும் கட்டுமானம் மண்டலத்தலைவர்ஸ்ரீதர், வீரியம்பாளையம் மாநகராட்சி நடுநி லைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆனந்தன், திட்ட ஒருங்கிணைப்பாளர் சம்பத்குமார் வேலுசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



