fbpx
Homeபிற செய்திகள்‘மக்களைத் தேடி மருத்துவம்’ முதல்வருக்கு கோடான கோடி நன்றி தெரிவித்த பெரம்பலூர் மக்கள்

‘மக்களைத் தேடி மருத்துவம்’ முதல்வருக்கு கோடான கோடி நன்றி தெரிவித்த பெரம்பலூர் மக்கள்

பெரம்பலூர் மாவட்டத்தில், இரத்த சர்க்கரை நோய், இரத்த கொதிப்பு உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்ட 27,926 பேர் ‘மக்க ளைத் தேடி மருத்துவம்’ திட்டத்தில் சிகிச்சை பெற இதுவரை பதிவு செய்துள்ளனர். இவர்களில் 13,774 பேருக்கு இல்லங்களுக்கே சென்று பரிசோதனை செய்து, மாத்தி ரைகள் வழங்கப்பட்டுள்ளன.

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின், பதவி பொறுப்பேற்ற நாள் முதல் மக்களின் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்களை தொட ர்ந்து செயல்படுத்தி வருகிறார். ‘ஸ்டா லினின் ஏழு உறுதிமொழிகள்’ என்ற 10 ஆண்டு தொலைநோக்குத் திட்டத்தில் ‘அனைவருக்கும் நல் வாழ்வு’ என்பது ஒரு முக்கிய உறுதி மொழியாகும். அ

தனை நிறைவேற்றும் வகையில் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ என்ற திட்டத்தை முதல்வர் 05.08.2021 அன்று கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஒன்றியம் சாமணப்பள்ளி என்ற மலைக் கிராமத்தில் தொடக்கி வைத்தார்.

இந்தியாவிற்கு ஒரு முன்னோடி திட்டமாக விளங்கும் வகையில் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ எனும் மகத்தான திட்டம் தொடங் கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் ரத்த அழுத்தம், நீரிழிவு, சிறுநீரகப் பிரச்சனை, பிசியோதெரபி சிகிச்சை, புற்றுநோய் பாதிப்பு உள்ளிட்ட தொடர் மருத்துவ சிகிச்சை தேவைப் படுபவர்கள் மருத்துவமனைகளுக்கு தேடி வரக்கூடிய நிலையினை மாற்றி, மருத்துவப் பணியாளர்கள் மக்களைத் தேடிச் சென்று அவர்களுக்கு பரிசோதனைகளைச் செய்து, மருந்து, மாத்திரைகள் உள்ளிட்ட மருத்துவ சேவை வழங்குவது இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

இத்திட்டத்தில் பொது சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் மருத்துவ தன் னார்வலர்கள் பங்கேற்று மருத்துவ சேவை ஆற்ற உள்ளார்கள்.

35 லட்சம் குடும்பம்
பயன்பெறும்
முதல் கட்டமாக சில அவசிய மருத்துவ சேவைகள் வழங்கப்படுகின்றன. பரீட்சார்த்தமாக தமிழகத்தில் சில பகுதியில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டமானது, இந்த ஆண்டு இறுதிக்குள் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.

இத்திட்டத்திற்காக ரூ.242 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். இந்த ஆண்டு இறுதிக்குள் சுமார் 35 லட்சம் குடும்பங்கள் இத்திட்டத்தின் கீழ் பயன் பெற உள்ளன.

இத்திட்டத்தின் மூலம் நோயாளிகளை பரிசோதிக்க தேவையான இரத்த அழுத்தம் அளவிடும் கருவி, இரத்த சர்க்கரை அளவை அளவிடும் கருவி போதுமான அளவு மக்களுக்கு மகளிர் சுகாதார தன் னார்வலர்களுக்கு வழங்கப்படும்.

மகளிர் சுகாதார தன்னார்வலர்கள் வீடுகளுக்கு மருந்துகள் எடுத்து செல்ல தேவையான பை, முத்திரை பதிக்கப்பட்ட பெட்டி, மருந்து விவரங்கள் அடங்கிய அட்டை மற்றும் நோயாளிகளின் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
இயன்முறை மருத்துவர்கள், நோய் ஆதரவு சேவைகளுக்கான செவிலியர் சேவைகள் வழங்குவதற்கான உபகரணங்கள் அடங்கிய பை வழங்கப்பட்டுள்ளது.

தொற்றா நோயினால் பாதிக்கப்பட்ட 45 வயதிற்கு மேற்பட்டவர்களின் பட்டியல் கிராமம் மற்றும் தெரு வாரியாக கணக்கெடுத்து வைக்கப்படும். மருந்துகள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருந்து துணை சுகாதார நிலையங்களுக்கு தனி வாகனத்தின் மூலம் கொண்டு செல்லப்பட்டு மக்களுக்கு மகளிர் சுகாதார தன்னார்வலர்கள் மூலம் வழங்கப்படும்.

நோயாளிகளுக்கு
மருந்து பாதுகாக்க பெட்டி
ஒவ்வொரு நோயாளிக்கும் மருந்துகளை வைத்துக் கொள்ள நிரந் தரமாக பயன்படுத்தபடும் வகையில் Plastic பெட்டி வழங்கப்படும். நுண் திட்டம் (Micro Plan) மாவட்டம், வட்டம், ஆரம்ப மற்றும் துணை சுகாதார நிலையங்களில் வரையறுக்கப்படும்.

மகளிர் சுகாதார தன்னார்வலர்கள் இயன்முறை மருத்துவர் நோய் ஆதரவு சேவைகளுக்கான செவிலியர் முன்ப யணத் திட்டம் தயார் செய்யப்பட்டு மக்களைத் தேடி மருத்துவச் சேவை வழங்க அதற்கான சிறப்பு வாகனம் வழங்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் (05.08.2021) அன்று வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பெருமத்தூர் கிராமத்தில் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட் டத்தில் வீடுக ளுக்குச் சென்று மருந்து, மாத்தி ரைகள் வழங்கும் களப் பணி துவக்க விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் ப.ஸ்ரீவெங்கட பிரியா தலைமை தாங்கினார்.

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் இத்திட்டத்தை துவக்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து, 10.08.2021 அன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பேரளி பகுதியில் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தின் கீழ் பொதுமக்களின் வீடு தேடிச் சென்று மருந்துபொருட்களை வழங்கி, பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

இறப்பு விகிதம் குறையும்
‘மக்களைத் தேடி மருத்துவத்தின்’ சிறப்பு அம்சங்களாக, மக்களை வீடு தேடி சென்று மருத்துவச் சேவை செய்வதன் மூலம் தொற்றா நோய்களான இரத்த கொதிப்பு மற்றும் சர்க்கரை வியாதிகளால் ஏற்படும் இறப்பு விகிதம் குறைக்கப்படும்.

இந்த மக்களைத் தேடி மருத்துவம் என்ற மருத்துவச் சேவை மூலம் பெரம்பலூர் மாவட்டத்தில் இரத்த சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்ட 8,880 பேர், இரத்த கொதிப்பு நோயி னால் பாதிக்கப்பட்ட 13,806 நபர்கள், இரத்த சர்க்கரை மற்றும் இரத்த கொதிப்பு நோயினால் பாதிக்கப்பட்ட 5,240 பேர் ஆக மொத்தம் 27,926 பேர் சிகிச்சைக்காக இதுவரை பதிவு செய்துள்ளனர்.

இவர்களில் இரத்த சர்க்கரை நோயாளிகள் 5,257 பேருக் கும், இரத்த கொதிப்பு நோயா ளிகள் 6,092 பேருக்கும், இரத்த சர்க் கரை மற்றும் இரத்த கொதிப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 2,425 பேர் என ஆக மொத்தம் 13,774 பேருக்கு அவர்களின் இல்லங்களுக்கே சென்று பரிசோதனை செய்து மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளன.

மீதமுள் ளவர்களுக்கு மாத்திரைகள் வழங்கும் பணிகள் தொடர்ந்து நடை பெற்று வருகின்றன. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில், புதியதாக பதிவு செய்யும் பொதுமக்களுக்கும் வீடு தேடிச்சென்று மாத்திரைகள் வழங்கப்படும்.

“ஒரு வயிற்றில் பிறப்பதற்கு அவ்வயிற்றில் இடம் இல்லை அதனால் ஒருகோடி தாய் வயிற்றில் பிறந்திட்ட உடன்பிறப்புகள் நாம்”என்று முத்தமிழ் அறிஞர் கலைஞர் வாக்கை நிறைவேற்றும் வகையில் தமிழக மக்களை உடன்பிறப்புகள் ஆக ஏற்று இந்தியாவிற்கே முன் னோ டியாக உயிர்காக்கும் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தினை கொண் டுவந்த முதல்வருக்கு பெரம்பலூர் மாவட்ட மக்கள் கோடான கோடி நன்றியை தெரிவித்தனர்.


‘மருந்துக்குப் போனா
வேலைக்கு போக முடியாது’
“மக்களைத் தேடி மருத்துவம்”திட்டத்தில் பயன்பெற்ற ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியம் மேலமாத்தூர் – எலந்தங்குழி கிராமத்தைச் சேர்ந்த வேலு தெரிவித்ததாவது:
எனக்கு 55 வயசாச்சு. எனக்கு இரண்டு பெண் பிள்ளைகள் மற்றும் ஒரு ஆண் பிள்ளை உள்ளனர்.
இரண்டு பெண் பிள்ளைகளும் திருமணமாகி தனியாக உள்ளனர். எனது மகன் சற்று மனநலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இருக்கிறார். எனக்கு சுகர் மற்றும் லோ சுகர் நீண்ட நாட்களாக உள்ளது. அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்குப் போய் மாத்திரை வாங்குவேன். மாத்திரை வாங்கப் போர அன்னைக்கு என்னால எந்த வேலைக்கும் போக முடியாது. போன வாரம் நர்ஸ் அம்மா, வீட்டுக்கு வந்தாங்க. பிரஷர், சுகர் செக் பண்ணிட்டு ரெண்டு மாசத்துக்கு வேணும்கிற மாத்திரை கொடுத்தாங்க இனிமே நீங்க ஆஸ்பத்திரிக்கு வர தேவையில்லை.
முதல்வர் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டம் கொண்டு வந்திருக்காங்க அதனால நாங்களே வந்து உங்களுக்கு செக் பண்ணி மாத்திரை கொடுத்துடுவோம், நேர நேரத்துக்கு கரெக்டா மாத்திரை சாப்பிடுங்கன்னு சொன்னாங்க.
ஏழை, எளிய மக்கள் சிரமப்படக் கூடாது அவர்களுக்கு உதவுவதற்காக நிறைய திட்டங்களை கொண்டு வந்த முதல்வர் ஐயாவுக்கு கோடான கோடி நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
‘வயசானதாலே நடக்க முடியல மருந்து
வாங்க போகலே’
வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நன்னை கிராமத்தில் வசிக் கும் முத்துசாமி கூறியதாவது:

எனக்கு 75 வயதாகிறது. இரண்டு மகன் ஒரு மகள் உள்ளனர். அனை வருக்கும் திருமணம் முடிந்து தனித் தனியே வாழ்ந்து வருகின்றனர். நான் மூத்த மகனுடன் வசித்து வருகிறேன்.

அவர் விவசாயம் மற்றும் கூலி வேலை செய்து என்னையும் என் மனைவியையும் பார்த்து வருகிறார். பல வருஷமாக சர்க்கரை மற்றும் பிரஷர் நோயால் அவதிப்பட்டு வருகிறேன், சர்க்கரை நோயால் என்னால் வேகமாக நடக்க முடியாது. நான் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று சர்க்கரை மாத்திரை பெற்று வருவேன்.

ரெண்டு மாசமா என்னால போக முடியல, ரெண்டு நாளைக்கு முன்னாடி நர்ஸ் அம்மா வீட்டுக்கு வந்தாங்க, இரத்த டெஸ்ட் எல்லாம் எடுத்து பார்த்துட்டு ரெண்டு மாசத்துக்கு வேணுங்கிற மாத்திரை கொடுத்துட்டு போனாங்க.

வீட்டுக்கே வந்து மாத்திரை கொடுக்கறீங்களா என்ன விஷயம்னு கேட்டேன். முதல்வர் ஐயா உங்கள மாதிரி சக்கரை வியாதி, ரத்தக் கொதிப்பு இருக்கரவங்களுக்கு வீட்டுக்கே வந்து டெஸ்ட் பண்ணி மாத்திரை கொடுக்கணும்னு சொல்லி திட்டம் கொண்டு வந்திருக்கிறார் என்று சொன்னாங்க.

100 நாள் வேலைக்கு கூட போக முடியாம சிரமப்பட்ட எனக்கு வீடு தேடி வந்து பரிசோதனை செஞ்சு மாத்திரை குடுத்துட்டு போற இந்தத் திட்டத்தை கொண்டு வந்த முதல்வர் ஐயா மகராசனா இருக்கணும். அவருக்கு கோடான கோடி நன்றியை தெரிவிக்கிறேன்.

தொகுப்பு
வெ.சீனிவாசன்,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்.
மு.சுதாகர்,
உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி),
பெரம்பலூர் மாவட்டம்.

படிக்க வேண்டும்

spot_img