fbpx
Homeபிற செய்திகள்கொரோனா தடுப்பூசி முகாம் அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு

கொரோனா தடுப்பூசி முகாம் அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட காட்டாம்பூண்டி, தச்சம்பட்டு, நவம்பட்டு ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்ற வரும் 3-வது மாபெரும் கோவிட்- 19 தடுப்பூசி செலுத்தும் முகாமினை தமிழக பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதனை தொடர்ந்து அமைச்சர் எ.வ.வேலு காட்டாம் பூண்டி அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தினை ஆய்வு செய்தபோது கூறுகையில் திருவண்ணாமலை மாவட்டத்தினை 100 விழுக்காடு தடுப்பூசி செலுத்திய மாவட்டமாக அறிவிக்க பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு முழு ஒத்துழைப்பு தரவேண்டும் என்றார்.

தமிழக அரசால் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவுவதை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மாநிலம் முழுவதும் 18 வயதிற்கு மேற்பட்ட தகுதியுடைய அனைவருக்கும் கோவிட் தடுப்பூசி செலுத்திட அனைத்து துறையின் ஒருங்கிணைப்புடன் கடந்த 12ம் தேதி அன்று முதல் மாபெரும் கோவிட் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணிக்காக முதல் வாரம் 12ந்தேதி அன்று மாவட்டம் முழுவதும் அமைக்கப்பட்டிருந்த 1004 கோவிட் தடுப்பூசி முகாம் களில் 1,04,325 நபர்களும், 2-வது வாரம் 19ந்தேதி அன்று நடைபெற்ற மாபெரும் கோவிட் தடுப்பூசி முகாமில் 77,085 நபர்களும் மாவட்டத்தில் தடுப்பூசிகள் செலுத்திக்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து 3-வது வாரமாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) 1017 இடங்களில் மாபெறும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

இந்நிகழ்வின்போது மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ், கூடுதல் ஆட்சியர் மு.பிரதாப், உதவி ஆட்சியர் (பயிற்சி) கட்டா ரவி தேஜா, சுகாதராப்பணிகள் துணை இயக்குநர் செல்வக்குமார், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் புவனேஷ்வரி, ஆணையாளர் கே.சி.அமிர்தராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ.) சு.அருணாச்சலம், தாசில்தார் எஸ்.சுரேஷ், மற்றும் மருத்துவர்கள், செவிலியர், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற் றும் பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img