பெரம்பலூர் மாவட்டம், பெரம்பலூர் மற்றும் வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில், வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டப் பணிகளை, மாவட்ட ஆட்சியர் ப.ஸ்ரீவெங்கட பிரியா, கடந்த 23-ம் தேதி செய்தியாளர்களுடன் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட, வடக்குமாதவி – கீழக்கரை பகுதியில் தேசிய தோட்டக்கலை மற்றும் மலைபயிர்கள் துறையின் சார்பில் விவசாயி அத்தியப்பன் என்பவர் ரூ.1.77 இலட்சம் மானியத்தில் நிழல்வலை குடில் சாகுபடி முறையில் கீரை வகைகள் மற்றும் நாற்றங்கால் உற்பத்தி செய்து வருவாய் ஈட்டி வருகிறார்.
அவரது நிழல்வலைகுடில் பகுதியை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு, பல்வேறு நாற்றுக்கள் உற்பத்தி செய்யப்படுவதை ஆய்வு செய்தார்.
வடக்குமாதவி – கீழக்கரை பகுதியில் விவசாயி வேலுமணி என்பவர் 1.85 ஹெக்டர் நிலத்தில் பயிர் செய்துள்ள நிலக்கடலைக்கு சொட்டு நீர் பாசனத்தின் மூலம் தெளிப்பு நீர் பாய்ச்சும் முறையையும், விவசாயி ஜெய்தினேஷ் என்பவர் நிலத்தில் பண்ணை குட்டை அமைத்து உட்புறம் பாலிதின் தார்ப்பாய் விரித்தமைக்கு, ரூ.75,000 மானியத்தில், பண்ணை குட்டையில் சேகரமாகும் மழை நீர் கொண்டு, சாகுபடி செய்துவரும் தோட்டக்கலை பயிர்களான முருங்கை தென்னை மற்றும் எலுமிச்சைக்கு நீர் பாய்ச்சி வருவதையும் பார்வையிட்டார்.
உபரி வருவாய் ஈட்டும் பொருட்டு குட்டையில் சேகரிக்கப்பட்ட மழைநீரில் மீன்குஞ்சுகள் வளர்த்து வரும் முறையையும் பார்வையிட்டார்.
எசனை கிராமத்தில், விவசாய உற்பத் தியாளர் நிறுவன குழுமத்தின் மூலம், வேளாண் விளைபொருட்கள் ரூ.10 இலட்சம் மானியத்தில் மாவு அரைக்கும் இயந்திரம், கடலை உரிக்கும் இயந்திரம், எண்ணெய் செக்கு உள்ளிட்ட பல்வேறு மதிப்புக் கூட்டும் இயந்திர மையத்தினை திறந்து வைத்து பார்வையிட்டு அதன் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.
வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியம் நூத்தப்பூர் பகுதியில் 1,250 ஹெக்டர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள, மக்காச்கோள பயிரில் ஒருங்கிணைந்த படைப்புழு மேலாண்மை செயல் விளக்கத் திடலினையும், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் வெங்கனூர் கிராமத்தில் 8 நபர்களின் பங்களிப்போடு 14.6 ஏக்கர் தரிசு நிலத்தை விவசாய நிலங்களாக மாற்றும் திட்டத்தினையும் பார்வையிட்டார்.
நடமாடும் மண் பரிசோதனை நிலையத்தின் மூலம் நேரடியாக கிராமங்களுக்குச் சென்று விவசாயிகளின் வயல் மண்ணை ஆய்வு செய்து அன்றைய தினமே ஆய்வு முடிவுகள் வழங்கப்பட்டு மண்ணில் உள்ள சத்து குறைபாடுகளும் மற்றும் அதற்கான தீர்வுகள் மண்வள அட்டை மூலம் வழங்கப்படுவது குறித்து ஆட்சியர் பார்வையிட்டார்.
பரிசோதனை முறைகள் குறித்து சம்மந்தப்பட் அலுவலர்களிடம் கேட்டறிந்தார். வேப்பந்தட்டை பருத்தி ஆராய்ச்சி நிலையத்தில், நவீன முறையில் பருத்தி சாகுபடி குறித்தும், 1 மீட்டர் இடைவெளியில் பருத்தி சாகுபடி செய் வதன் மூலம் நவீன முறையில் களை எடுப்பது, மருந்து தெளித்தல் குறித்து செயல் விளக்கமாக மாவட்ட ஆட்சியரின் முன்பு செய்து காண்பிக்கப்பட்டது.
நவீன முறையில் பருத்தி சாகுபடி செய்வது தொடர்பான கையேட்டினை ஆட்சியர் வெளியிட்டார். இளங்கலை விவசாயம் படிக்கும் மாணவ, மாணவிக ளுடன் கலந்துரையாடினார்.
வடக்கு மாதவி நியாயவிலைக் கடையில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் பொருட்களின் தரம், அளவு ஆகியவற்றை ஆய்வு செய்தார். குடிமைப்பொருட்கள் முறையாக வழங்கப்படுகிறதா என ஆட்சியர் ப.ஸ்ரீவெங்கட பிரியா கேட்டறிந்தார்.
இணை இயக்குநர் (வேளாண்மைத் துறை) கருணாநிதி, துணை இயக்குநர்கள் பாத்திமா, ஏழுமலை, பாபு, உதவி இயக்குநர் (வேளாண்மை பொறியியல் துறை) இலாட்வின் இஸ்ரேல், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) பூவலிங்கம், உதவி செயற் பொறியாளர் (வேளாண்மை பொறியியல் துறை) அறிவழகன், வேளாண்மை உதவி இயக்குநர் பச்சையம்மாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



