fbpx
Homeபிற செய்திகள்கஞ்சா விற்ற வாலிபர் கைது

கஞ்சா விற்ற வாலிபர் கைது

கோவை ராமநாதபுரம் போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் மெய்யழகன் தலைமையில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது ராமநாதபுரம் கருப்பராயன் கோவில் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவரை பிடித்து சோதனை நடத்தினர். சோதனையில் அந்த வாலிபரிடம் கஞ்சா பொட்டலங்கள் விற்பனைக்கு இருந்தது தெரிய வந்தது .

தொடர்ந்து நடத்திய விசாரணையில் ராமநாதபுரம் லட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்த ரவி என்பவரின் மகன் ரங்கநாதன் (26) என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் இருந்து 200 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

படிக்க வேண்டும்

spot_img