fbpx
Homeபிற செய்திகள்வேளாண் கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடனை விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள்...

வேளாண் கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடனை விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடனை விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இணையவழியில் நடந்த குறைதீர் கூட் டத்தில், கோவை மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் வலியு றுத்தினர்.
கோவை மாவட்டத்தில் கொரோனா நோய்தொற்று பரவலை தடுப்பதற்கென அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின் படி, விவசாயிகளின் பல்வேறு பிரச்சி னைகளுக்கு தீர்வு காணும் வகையில் இணைய வழியில் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நேற்று (செப்.24) மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன், தலைமையில் நடைபெற்றது.

விவசாயிகள், அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் Zoom App மூலம் இணைய வழியாக கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை ஆட்சி யரிடம் தெரிவித்தனர்.

கோவை வேளாண்மை இணை இயக் குநர் வரவேற்றார். அனைத்துத் துறை அலுவலர்கள் தங்கள் துறைகளின் நலத் திட்டங்களை விளக்கினர்.
பின்னர் விவசாயிகள் 11 வட்டாரங்களிலும் இருந்து ,தங்களது கோரிக்கைகளை ஆட்சியரிடம் தெரிவித்தனர்.

விவசாயிகளுக்கு 1 இலட்சம் மின் இணைப்பு வழங்கப்படும் என்ற அறிவிப் புக்கு, முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர். விவசாயிகளுக்கு, வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடனை விரைவாக வழங்கவேண்டும்.

பரம்பிக்குளம் ஆழியாறு திருமூர்த்தி அணை கால்வாய்களை தூர்வாரி சுத்தம் செய்ய வேண்டும். வனவிலங்கு – மனிதமோதலை தடுக்க வனத் துறையினருடன் இணைந்து, ஒரு தனி கூட்டம் நடத்த வேண்டும்.

பொள்ளாச்சி வடக்கு வேளாண்மை விரிவாக்க மையம் ஏற்கனவே உள்ள இடத்திலேயே தொடரவேண்டும்.

காட்டம்பட்டி ஜக்கார்பாளையம் பகுதிகளில் தனியார் நிறுவனங் கள் சுண்ணாம்பு கல்லை, வெளி மாநி லங்களுக்கு கடத்துவதை தடுக்க நடவடிக்கை வேண்டும்.

வரப்பாளையம் நஞ்சுண்டாபுரம் கிராமம் தாளியூர் இணைப்பு சாலையில் காஸ்டிங் மணல் கொட்டுவதை தடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

விவசாயிகளின் பல்வேறு கோரிக் கைகளுக்கு மாவட்ட ஆட்சியர் நேரிடையாக பதில் கூறியும், சம்மந் தப்பட்ட துறை அலுவலர்கள் மூலமும் பதில் அளித்தார்.

படிக்க வேண்டும்

spot_img