fbpx
Homeபிற செய்திகள்மாற்றுத்திறனாளி சுயதொழில் மேற்கொள்ள கடனுதவி மாவட்ட கலெக்டர் வழங்கினார்

மாற்றுத்திறனாளி சுயதொழில் மேற்கொள்ள கடனுதவி மாவட்ட கலெக்டர் வழங்கினார்

சேலம் மாநகராட்சி, அம்மாப்பேட்டை மண்டலம், வாய்க்கால் பட்டறை பகுதியைச் சார்ந்த இரு கால்களையும் இழந்த மாற்றுத்திறனாளி கந்தசாமி என்பவர் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சரிடம் சுயதொழில் மேற்கொள்ள கடனுதவி கேட்டு 20.09.2021 அன்று அளித்த மனுவின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, கூட்டுறவுத்துறையின் மூலம் மாற்றுத்திறனாளிக்கு சுயதொழில் தொடங்க வட்டியில்லா கடனுதவியாக ரூ.50,000/-&க்கான காசோலையினை மாவட்ட கலெக்டர் கார்மேகம் வழங்கினார்.

அருகில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ரவிக்குமார், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மகிழ்நன் ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img