வீடியோ கேமிற்கு அடிமையாகும் இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பெற்றோர்கள் தொடக்கத்திலேயே இதற்கு தடை விதித்திருந்தால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கும்.
ஈரோடு பழைய பூந்துறை ரோடு பகுதியை சேர்ந்தவர் செல்லதுரை, பெயிண்டர். இவருக்கு 3 மகள்களும், 2 மகன்களும் உள்ளனர். இதில் மூத்த மகன் ஸ்ரீராம் 9ம் வகுப்பு வரை படித்து விட்டு தந்தையுடன் பெயிண்டர் வேலைக்கு சென்று வருகிறார்.
கடந்த 6 மாதங்களாக ஸ்ரீராம் அதிகமாக வீடியோ கேம் ஆடி வந்தார். இவர் கடந்த சில வாரங்களாக வீடியோ கேமிற்கு அடிமையானார். இதை பார்த்த பெற்றோர் அவரை கண்டித்து செல்போனை பிடுங்கிவிட்டனர்.
இதனால் மனம் உடைந்த ஸ்ரீராம் இரவு நேரத்தில் யாரும் இல்லாத சமயம் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தொடக்கத்திலேயே இதை தடுத்திருந்தால் வாலிபரின் உயிரை போக விடாமல் தடுத்திருக்கலாம்.



