fbpx
Homeபிற செய்திகள்கோவையில் ஏதர் மின்சார வாகன எக்ஸ்பீரியன்ஸ் சென்டர் துவக்கம்

கோவையில் ஏதர் மின்சார வாகன எக்ஸ்பீரியன்ஸ் சென்டர் துவக்கம்

கோவையில் ஏதர் மின்சார வாகனத்தின் எக்ஸ்பீரியன்ஸ் சென்டர் துவங்கப்பட்டுள்ளது. கோவை ராம்நகர் பகுதியில் ஏதர் மின்சார வாகன (எக்ஸ்பீரியன்ஸ் சென்டர்) விற்பனையகம் நேற்று துவங்கப்பட்டுள்ளது.

ராஜ்துரை இ-வெய்கில்ஸ் நிறுவனத் தினர் தொடங்கியுள்ள இந்த எக்ஸ்பீரியன்ஸ் சென்டரில் ஏதர் நிறுவனத்தின் துணை தலைவர் நிலாய்சந்திரா கலந்து கொண்டு புதிய மின்சார இருசக்கர வாகனங்களை அறிமுகம் செய்து வைத்தார்.

இதனைத்தொடர்ந்து விற்பனையக நிர்வாக இயக்குனர் வைஷ்ணவி மற்றும் முதன்மை இயக்குனர் வைஷ்ணவ் ஆகி யோர் செய்தியாளர்களிடம் கூறிய தாவது:
கோவையில் முதல் ஏதர் விற்பனையகம் துவங்கப் பட்டுள்ளது.

இரண்டு மாடல்களில் மின்சார வாகனங்கள் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த வாகனத்தை ஒரு முறை சார்ஜ் செய்தால் 80 கிலோ மீட்டர் முதல் 100கி.மீ. வரை பயணிக்கலாம்.

ஒரு முறை சார்ஜ் செய்ய 3.5 யூனிட் மின்சாரம் செலவாகும்.
இதன் மூலம் பெட்ரோல் வாகனத்தை காட்டிலும் பல மடங்கு பணத்தை சேமிக்க முடியும். ஒரு மாதத்திற்கு ரூ.800 ரூபாய் மட்டுமே மின்சாரத்திற்காக செலவாகும்
இந்த வாகனத்திற்கு ஆயில் உள்ளிட்ட உபகரணங்கள் தேவையில்லாத காரணத்தால் ஒவ்வொரு 5 ஆயிரம் கிலோ மீட்டர் பயணத்திற்கு ஒருமுறையும் ரூ.1000 ரூபாய்க்குள் சர்வீஸ் செய்து கொள்ளலாம்.

திருடு போவதை தடுத்தல், பெண் களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்தல், ப்ளூடூத், கூகுள் மேப்ஸ் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இந்த வாகனத்தில் உள்ளன.

இந்த வாகனத்தின் விலை ரூ.1 லட்சத்து 30 ஆயிரத்தில் இருந்து துவங்குகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

படிக்க வேண்டும்

spot_img